34 குழந்தைகளை கொன்று குவித்த இஸ்ரேலுக்கு உலக நாடுகள் கண்டனம்!
பெய்ரூட்:
தெற்கு லெபனானில் க்வானா என்ற கிராமம் மீது இஸ்ரேல் விமானப் படை நடத்தியகொடூரத் தாக்குதலில்34 குழந்தைகள் உள்பட54 பேர் பலியானதற்கு உலக நாடுகள்கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
போர் காரணமாக முகாமில் தங்கியிருந்த அப்பாவிகள் மீது ஞாயிற்றுக்கிழமை இந்தகொடூரமான தாக்குதலை இஸ்ரேல் நடத்தியது.இதற்கு லெபனான் பிரதமர் பெஃளத் சினியோரியா இஸ்ரேலுக்கு கடும் கண்டனம்தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், இப்படிப்பட்ட சூழ்நிலையில் பேச்சுவார்த்தைஎன்ற பேச்சையே எடுக்க முடியாது. உடனடியாக, நிபந்தனையற்ற போர் நிறுத்தத்தைமேற்கொள்ள இஸ்ரேலை உலக நாடுகள் கடுமையாக வலியுறுத்துவதைத் தவிர வேறுவழியில்லை.
லெபனானில் இஸ்ரேல் நடத்தி வரும் படுகொலைகள் குறித்து உலக நாடுகள்விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
இஸ்ரேலுக்கு பிரான்ஸ், ஸ்பெயின், ஜப்பான், இந்தியா போன்ற நாடுகளும் கடும்கண்டனம் தெரிவித்துள்ளன.
இஸ்ரேலை கண்டிக்க பிரான்ஸ் நேற்று ஐ.நா. பாதுகாப்பு சபையில் தீர்மானம் கொண்டுவந்தது. அதன் மீது உரையாற்றிய ஐ.நா. பொதுச் செயலாளர் கோபி அன்னான்,இஸ்ரேலை உலக நாடுகள் கடுமையாக கண்டிக்க வேண்டும் என்று கோரிக்கைவைத்தார்.
க்வானா சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும், உடனடியாகஇஸ்ரேல்போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்றும் ஐ.நா. பாதுகாப்பு சபைவேண்டுகோள் விடுத்துள்ளது.
முன்னதாக பெய்ரூட் நகருக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் காண்டலீசாரைஸ் வருவதாக இருந்தது. ஆனால் அவரது வருகையால் எந்தப் பயனும் இருக்கப்போவதில்லை. போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டால் மட்டுமே இனிமேல்யாருடனும் பேச நாங்கள் தயாராக இருக்கிறோம் என சினியோரியா கூறி விட்டதால்ரைஸ்தனது பெய்ரூட் பயணத்தை ரத்து செய்துவிட்டார்.
க்வான படுகொலைகளுக்கு ஹிஸ்புல்லா இயக்கம் கடும் கண்டனம்தெரிவித்துள்ளதோடு, இதற்கு சரியான பதிலடி கொடுக்கப் போவதாகவும்எச்சரித்துள்ளது.
இஸ்ரேலுக்கு கடுமையான பதில் தராமல் ஓய மாட்டோம் என்று அந்த அமைப்புதெரிவித்துள்ளது.
உலக நாடுகளின் கடும் கண்டனம் காரணமாக தெற்கு லெபனான் மீதான தனது வான்வழித் தாக்குதல்களை 48 மணி நேரத்திற்கு நிறுத்தி வைப்பதாக இஸ்ரேல்அறிவித்துள்ளது. அதற்குள் பொது மக்கள் அனைவரும் வெளியேறி விட வேண்டும்என்றும் இஸ்ரேல் கூறியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் இது அமலுக்குவந்துள்ளது.
இருப்பினும் தரைவழித்தாக்குதலை இஸ்ரேல் தொடர்ந்துமேற்கொளளும் எனதெரிவித்துள்ளது.
ஐ.நா. அலுவலகங்கள் மீது தாக்குதல்:
இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு லெபனானின் கடும் எதிர்ப்புஎழுந்துள்ளது. லெபனானில உள்ள ஐ.நா அலுவலகங்களைமுற்றுகையிட்டஆயிரக்கணக்கான லெபானியர்கள் அந்த அலுவலங்களை அடித்து நொறுக்கினர்.
நிலைமை மோசமாவதை உணர்ந்த லெபனான் நாடாளுமன்ற சபாநாயகர் நபி பெர்ரிமக்கள் அமைதி காக்க வேண்டும் என்று தொலைக்காட்சி மூலம் கோரிக்கை விடுத்தார்.ஹிஸ்புல்லா அமைப்பினரும் மக்கள் அமைதி காக்குமாறு கோரியுள்ளனர்.
எங்களது மக்களை சின்னாபின்னப் படுத்துவதற்காக இஸ்ரேலுக்கு குண்டுகளையும்,ராக்கெட்டுகளையும் அனுப்பி வருகிறார் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ். ஆனால்எங்களது உடலில் இருந்து சிதறும் ஒவ்வொரு துண்டும் உயிர்த்தெழுந்து அவர்களுக்குஎதிராக போராடும் என்பதை அவர் நினைவில்கொள்ள வேண்டும் என்று ஹிஸ்புல்லாஅமைப்பு கூறியுள்ளது.
இந் நிலையில் , இஸ்ரேலை கண்மூடித்தனமாக ஆதரித்து வரும் அமெரிக்காவுக்குஎதிர்ப்பு வலுத்து வருகிறது.
ஜெர்மனி, இத்தாலி, பின்லாந்து,கோஸ்டாரிகா உள்ளிட்ட பல உலக நாடுகள்இஸ்ரேலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இஸ்ரேலைக் கண்டித்து பெய்ரூட், பாரிஸ், பிரஸ்ஸல்ஸ், கராச்சி உள்ளிட்ட நாடுகளில்பிரமாண்ட கணடனப் பேரணிகள் நடந்தன.
டுனீஷியா3 நாள் துக்கத்தை அறிவித்துள்ளது. வாடிகனிலும் இந்த கண்டனம்எதிரொலித்தது. அங்கு நடந்த பிரார்ததனைக் கூட்டததில் லெபனானில் அமைதிதிரும்ப உருக்கமான பிரார்த்தனை நடத்தப்பட்டது.
போப்பாண்டவரும் உடனடியாக போர் நிறுத்தம் அமல்படுத்தபபட வேண்டும் என்றுகூறியுள்ளார்.
க்வானா படுகொலைகளுக்கு ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவும்கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார். இது மிகவும் கொடூரமான போர் குற்றம் எனஅவர் கூறியுள்ளார்.
இஸ்ரேலின் போக்கு ஈராக்கையும், அதன் பிராந்திய நாடுகளையும் கடுமையாகபாதிக்கும் என ஈராக் துணைப் பிரதமர் பர்ஹாம் சலா கூறியுள்ளார். இதுதவிர பல்வேறுஅரபு நாடுகளும்,முஸ்லீம் நாடுகளும் இஸ்ரேலுக்கு கடும் கண்டனம்தெரிவித்துள்ளன.
ரைஸ் கண்டனம்: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரைஸ் இந்த கொடூர சம்பவம்குறித்துக் கூறுகையில், அப்பாவி மக்கள் 54 பேர் உயிர் பறிக்கப்பட்டுள்ள சம்பவம்மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பாவி மக்களைத் தாக்குவதை இஸ்ரேல்தவிர்க்க வேண்டும்.
போரை நிறுத்த இஸ்ரேல் பரிசீலிக்க வண்டும். அதேசமயம், போரை நிறுத்துவதன்மூலம் எதையும் விட்டுக்கொடுக்கிறோம் என்று இஸ்ரேல் நினைக்கத் தேவையில்லை.
ஹிஸ்புல்லாவின் நடவடிக்கைகள் ஒடுக்கப்பட வேண்டும் என்பதில் எந்தக் கருத்துமாற்றத்திற்கும் இடமில்லை. லெபனான் எல்லையில் தீவிரவாதிகள்விரட்டியடிக்கப்பட வேண்டும் என்ற இஸ்ரேலின் கருத்தை இன்னமும் அமெரிக்காஆதரிக்கிறது என்றார் ரைஸ்.
முன்னதாக ஜெருசலேம் நகரில், இஸ்ரேல் பிரதமர் எஹூத் ஒல்மர்ட்டைரைஸ்சந்தித்துப் பேசினார்.
வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் பிளைன் ரெத்மியர் கூறுகையில், இஸ்ரேல்கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள வேண்டும். ஹிஸ்புல்லா விஷயத்தில்அமெரிக்காவின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை. இஸ்ரேல் தனத பிராந்தியத்தைப்பாதுகாத்துக் கொள்ள அனைத்து உரிமைகளையும் கொண்டுள்ளது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications