மீண்டும் போர் தொடங்கி விட்டது-புலிகள் அறிவிப்பு
கொழும்பு:
போர் நிறுத்த ஒப்பந்தம் காலாவதியாகி விட்டது. இனிமேல் போர்தான் என்றுவிடுதலை ப்புலிகள் அமைப்பின் திரிகோணமலை மாவட்ட அரசியல் பிரிவுத்தலைவர் எழிலன் கூறியுள்ளார்.
திரிகோணமலை மாவட்டத்தில் சிங்கள கிராமங்களுக்குச் செல்லும் தடுப்பணையின்மதகுகளை விடுதலைப் புலிகள் மூடி விட்டதால் விடுதலைப் புலிகளின் நிலைகள் மீதுஇலங்கை ராணுவம் மற்றும் விமானப் படைகள் கடந்த ஐந்து நாட்களாக தாக்கிவருகின்றன.மதகுகளை திறந்து விடவும் கடுமையாகமுயற்சித்து வருகின்றன. இருப்பினும்விடுதலைப் புலிகளின் கடும் தாக்குதல் காரணமாக மதகுகளை நெருங்க முடியாமல்தவித்து வருகின்றன இலங்கை படைகள். இன்று இரு தரப்பினருக்கும் இடையேநடந்த மோதலில் 5 ராணுவத்தினர் பலியாகினர்.
இந்த நிலையில் போர் மீண்டும் தொடங்கி விட்டது. இனிமேலும் போர் நிறுத்தஒப்பந்தம் நீடிப்பதாகக் கூற முடியாது, அது காலாவதியாகி விட்டது என்றுதிரிகோணமலை மாவட்ட புலிகள அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் எழிலன்கூறியுள்ளார்.
இதுகுறித்து எழிலன் கூறுகையில், கிழக்கு திரிகோணமலையில் விடுதலைப் புலிகளின்கட்டுப்பாடடில் உள்ள பகுதிகளை மீட்க இலங்கை ராணுவம் முயற்சித்து வருகிறது.இங்கு குண்டு வீசித் தாக்கிவருகிறது. அவர்களுக்கு புலிகள் பதிலடிகொடுத்துவருகின்றனர்.
போர் தொடங்கிவிட்டது. நாங்கள் எதற்கும் தயாராகஇருக்கிறோம். இந்தப் போரைஅரசுதான் தொடங்கியுள்ளது. எங்களது பகுதிக்குள் ராணுவம் நுழைந்தால் அதைராணுவ ரீதியாக சந்திக்க எங்களது படை தயாராகவே உள்ளன என்றார் எழிலன்.
இதற்கிடையே அணைப் பகுதியை ராணுவம் நெருங்கிவிட்டதாகவும், புலிகளுடன்நடந்த கடுமையான சண்டையில் 50க்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகள்கொல்லப்பட்டதாகவும் ராணுவத் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் இதை புலிகள்மறுத்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications