சபரிமலை: பெண்களுக்கு தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு
டெல்லி:
சபரிமலை கோவிலில் பெண்கள் வழிபட தடையை நீக்க வேண்டும் என்று கோரி, உச்சநீதிமன்றத்தில் பெண் வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.
டெல்லி உச்ச நீதிமன்றத்தில் பெண் வக்கீல்கள் பக்தி பசரிஜா, லட்சுமி சாஸ்திரி,பெரேனா குமாரி, அல்கா சர்மா, சுதாபால் ஆகியோர் சார்பில் வக்கில் ரவி பிரகாஷ்குப்தா உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.அந்த மனுவில்,
கேரளாவில் உள்ள சபரி மலை ஆலயத்துக்குள் 10 வயது முதல் 50 வயது வரையுள்ளபெண்கள் சென்று வழிபட தடை உள்ளது. கேரள இந்து ஆலய வழிபாடு நெறிமுறைச்சட்டத்தின் படி இந்த தடை விதிக்கப்பட்டு இருப்பதாக கேரள அரசு அறிவித்துநடைமுறைப்படுத்தி வருகிறது.
இந்தத் தடையை நீக்க வேண்டும். கேரள அரசின் இந்தத் தடைச் சட்டம், இந்தியஅரசியல் சட்டப்படி பெண்களுக்கு அளிக்கப்படும் உரிமைகளையும், அரசியல்சட்டப்பிரிவு 14ன் படி ஆண், பெண் சரி நிகர் என்ற உரிமையையும் பறிக்கிறது.
சபரிமலை கோவில், கேரள தேவசம் போர்டின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.சபரிமலை ஆலயத்துக்கு ஆண்டுக்கு ரூ. 8 லட்சத்தை கேரள அரசு கொடுக்கிறது. இந்தபணம் பொது மக்களின் பணம். எனவே, தேவசம் போர்டின் பரிந்துரையை ஏற்று,கேரள அரசு, சபரிமலைக்கு செல்ல பெண்களுக்கு தடை விதித்தது தவறு.
கோவிலுக்குள் பெண்கள் சென்று வழிபட அனுமதிக்க வேண்டும். மேலும் பெண்கள்செல்ல, கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும். வழிபாடு ஸ்தலங்களில்ஆண், பெண் என்ற பாகுபாட்டை நீக்க வேண்டும். அதற்கு உச்ச நீதிமன்றம் சரியானநடைமுறைகளை அறிவிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கேரள அரசு, திருவிதாங்கூர் தேவசம் போர்டு, சபரிமலை ஆலயதலைமை தந்திரி, பத்தனம் திட்டா, மாவட்ட மாஜிஸ்திரேட்டு ஆகியோர் எதிர்அணியாக சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications