சட்டசபையில் சிறுதாவூர் ஏற்படுத்திய சலசலப்பு!
சென்னை:
சிறுதாவூரில் தலித் நிலங்களை சசிகலா ஆக்கிரமித்த விவகாரம் குறித்து சட்டசபையில்காங்கிரஸ் உறுப்பினர் சுதர்சனம் பேச முயன்றபோது அதற்கு ஜெயலலிதா உள்ளிட்டஅதிமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பியதால் சலசலப்புஏற்பட்டது.
சுதர்சனம் பேசுகையில், சிறுதாவூர் பிரசசினை குறித்து இங்கு பேசிய மதிமுகஉறுப்பினர்கள் எதுவும் சொல்லவில்லை. ஆனால் 2 நாள் கழித்து அந்தக் கட்சித்தலைவர்... (அதிமுக உறுப்பினர்கள் ஜெ தலைமையில் எழுந்து நின்று கடும் கூச்சல்)சபாநாயகர் ஆவுடையப்பன் குறுக்கிட்டு, தேவையில்லாமல் உறுப்பினர்கள் எழுந்துநிற்கக் கூடாது, அமருங்கள் என்று அதிமுகவினரை நோக்கிக் கூறினார்.
அப்போது ஜெயலலிதா எழுந்து, இதுகுறித்து விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும்என அறிவித்துள்ளனர். எனவே இதுகுறித்து உறுப்பினர்கள் பேசுவது முறையல்லஎன்றார்.
சுதர்சனம் எழுந்து, நான் அதுகுறித்துப் பேசவில்லை என்றார்.
அப்போது மறுபடியும் அதிமுக உறுப்பினர்கள் கடுமையாக ஆட்சேபனை தெரிவித்துகுரல் எழுப்பியதால், வேறு பிரச்சினை குறித்துப் பேசுங்கள் என்று சபாநாயகர்சுதர்சனத்திற்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து சுதர்சனம் பேசுகையில்,காமராஜர் ஆட்சியில் 100 கோடி வருமானம் என்றுஅறிவிககப்பட்டது. இப்போது 38,000 கோடி வருமானம் அரசுக்கு வருகிறது. விலைவாசி உயர்வைத் தடுக்க வேண்டும்.
சட்டசபை நடவடிக்கைகளை அனைத்து மக்களும் காணும் வகையில் நேரடியாகஒளிபரப்ப வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications