இலங்கை போலீஸாருக்கு தமிழகத்தில் பயிற்சி: சட்டசபையில் மதிமுக எதிர்ப்பு-ராமதாஸ் கண்டனம்
சென்னை:
கோவையில் உள்ள மத்திய ரிசர்வ் படை பயிற்சி மையத்தில், இலங்கையை சேர்ந்த 54 போலீஸாருக்கு பயிற்சிஅளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு சட்டசபையில் மதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
சட்டசபையில் இன்று மதிமுக உறுப்பினர் கணணப்பன் பேசுகையில், இலங்கையில் தமிழர்கள் கொன்றுகுவிக்கப்பட்டு வருகிறார்கள். இந் நிலையில், கோவையில் உள்ள மத்திய அரசின் ரிசர்வ் படையின் பயிற்சிமையத்தில், இலங்கை ஆயுதப் படை போலீஸார் 54 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவது அதிர்ச்சிஅளிப்பதாக உள்ளது.இதைத் தடுக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழர்கள் மனதில்வேதனையே மிஞ்சும் என்றார்.
இதற்குப் பதிலளித்த முதல்வர் கருணாநிதி, பயிற்சிக்கு வாருங்கள் என்று தமிழக அரசு அவர்களை அழைக்கவும்இல்லை, இங்கு பயிற்சி எடுக்க அனுமதி அளிக்கவும் இல்லை. இதற்கான அனுமதியைத் தந்தது மத்திய அரசுதான். இங்கு தெரிவிக்கப்பட்ட உறுப்பினரின் உணர்வுகளை மத்திய அரசு கவனத்தில் கொள்ளும் என்றுஎதிர்பார்க்கிறேன் என்றார்.
ராமதாஸ் கடும் கண்டனம்:
இதேபோல பாமக நிறுவனர் ராமதாஸும், இலங்கை போலீஸாருக்கு கோவையில் பயிற்சி கொடுப்பதைகடுமையாக எதிர்த்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
அமைதிப் பேச்சுவார்த்தையை இலங்கை அரசு திட்டமிட்டு குலைத்துப்போட்டு விட்டது. தமிழர் பகுதிகள் மீதுபோர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தி தமிழர்களை கொன்று குவித்து வருகிறது.
இந் நிலையில் இலங்கை ஆயுதப் படையைச் சேர்ந்த போலீஸார் கோவை வந்துள்ளதாகவும், அங்கு அவர்களுக்குபயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
தமிழர்கள் அனைவருக்கும் இது அதிர்ச்சியான செய்தி என்பதில் சந்தேகம் இல்லை. ஈழத் தமிழ்களை நசுக்கிவரும் சிங்கள அரசுக்கு எந்த உருவத்திலும் உதவக் கூடாது என்பது இங்குள்ள தமிழர்கள் மட்டுமல்ல உலகில்உள்ள அத்தனை தமிழர்களின எண்ணமும் ஆகும்.
எனவே பயிற்சிக்காக கோவை வந்திருக்கும் இலங்கை போலீஸாரை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும்.மத்திய பாதுகாப்பு அமைச்சரோடு தொடர்பு கொண்டு இந்தக் கோரிக்கையை பாமக எம்.பிக்கள நேரில்வலியுறுததுவார்கள் எனறு கூறியுள்ளார் ராமதாஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications