சிக்குன் குனியா: சிகிச்சைக்குப் பணம் இல்லாததால்சிறுமி தற்கொலை-சட்டமன்றத்தில் எதிரொலி
சென்னை:
சிக்குன் குனியா காய்ச்சலுக்கு சிகிச்சை பெற பணம் இல்லாததாலும், நோயால்ஏற்பட்ட பயம் காரணமாகவும் சென்னையைச் சேர்ந்த சிறுமி தற்கொலை செய்துகொண்டார்.
ஆனால், தமிழகத்தில் யாரும் சிக்குன் குனியா காய்ச்சலால் பலியாகவில்லை எனநலத்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.கொருக்குப் பேட்டையைச் சேர்ந்தவர் சோட்டா பாய். இவரது மகள் நூர்ஜகான். 14வயதாகும் நூர்ஜகானுக்கு 2 நாட்களுககு முன் காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்துமருத்துவமனைக்கு சென்று சோதித்ததில், அவருக்கு சிக்குன் குனியா காய்ச்சல்தாக்கியிருப்பது தெரிய வந்தது.
இதைக கேட்ட நூர்ஜகான் பயந்து போனார். மேலும் மகளுக்கு வைத்தியம் பார்க்கபணம் இல்லையே என்று அவரது தந்தை சோட்டா பாய், தனது மனைவி
சகுருன்னிசாவிடம் அழுது புலம்பியுள்ளார்.இதைக் கேடட நூர்ஜகான் தனது வீட்டு ஏழ்மை நிலையை நினைத்து கலங்கிப்போனார். வீட்டில் யாரும் இலலாத நேரம் பார்தது மின் விசிறியில் தூக்குப் போட்டுத்தற்கொலைசெய்துகொண்டார்.
மகளின் உடலைப் பார்த்து தாயும், தந்தையும் கதறி அழுதது அப்பகுதியினரை பெரும்சோகத்தில் ஆழ்த்தியது.
பிரச்சனை கிளப்பிய சேகர்பாபு:
இந்த தற்கொலை விவகாரத்தை இன்று அதிமுக எம்எல்ஏ சேகர்பாபு சட்டமன்றத்தில்கிளப்பினார். அவர் பேசுகையில், எனது ஆர்கே நகர் தொகுதிக்குட்பட்ட பகுதியில் 14வயதான நூர்ஜகான் சிக்குன் குனியா நோயால் பலியாகியுள்ளார் என்றார்.
இதற்கு பதிலளித்த நலத்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் கூறுகையில்,
நூர்ஜகான் சிக்குன் குனியா நோயால் இறக்கவில்லை. அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது அவ்வளவு தூரம் பயப்பட வேண்டிய அளவுக்கு பயங்கர நோய்இல்லை. 4 நாட்கள் உரிய சிகிச்சை எடுத்தாலே நோய் சரியாகிவிடும். ஆனால்,சிகிச்சைக்கு பணமில்லாததால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த நோயை கட்டுப்படுத்த மேலும் கூடுதல் நிதி கோரி மத்திய நலத்துறைஅமைச்சரை நான் சந்திக்க இருக்கிறேன்.
பெங்களூரில் நடந்த தென் மாநில நலத்துறை அமைச்சர்கள் மாநாட்டில், தமிழகத்தில்தான் நோய் குறைந்த அளவில் பரவியுள்ளது தெரியவந்தது. இந்த நோய்க்குதமிழகத்தில் இதுவரை யாரும் பலியாகவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications