இலவச டிவிக்கு 2 ஆண்டு கியாரண்டி: கருணாநிதி
சென்னை:
தமிழக அரசு வழங்கவுள்ள இலவச தொலைக் காட்சிக்கு 2 ஆண்டு கியாரண்டிதரப்படும் என முதலவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:திமுக தேர்தல் அறிக்கையில், இலவச வண்ணத் தொலைக்காட்சி திட்டம்இடம்பெற்றபோது இது போலியான திட்டம் என்றார் ஜெயலலிதா.
இப்போது அந்தத் திட்டம் நடைமுறைக்கு வரவுள்ள நிலையில் வழங்கப்படும்தொலைக்காட்சிப் பெட்டிகள் தரமானதாக இருக்காது என்கிறார்.
இன்னும் தொலைக்காட்சிப் பெட்டிகளை வழங்காத நிலையில், அதைப் பார்ப்பதற்குமுன்பாகவே தரமானதாக இருக்காது என்று கூறுகிறார்.
திமுக அரசு வழங்கும் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் தரமானதாகஇருக்கும். 2 ஆண்டு உத்தரவாதத்துடன் தான் அந்த டிவி வழங்கப்படும்.
கலர் டிவிக்கு ஏன் சர்வதேச டெண்டர் கோரியிருக்கிறோம் என்று கேள்விஎழுப்பியுள்ளார் ஜெயலலலிதா, அப்படி டெண்டர் கோராவிட்டால் ஏன் கோரவில்லைஎன்று இதே ஜெயலலிதா கேள்வி கேட்பார். வாதங்களுக்கு பதில் சொல்ல முடியும்.வறட்டு வாதத்துக்கு பதில் சொல்ல முடியாது.
21 இன்ச் டிவி தருவதாக சொல்லிவிட்டு இப்போது 14 இன்ச் டிவி தருகிறோம் என்றுகுற்றம் சாட்டியுள்ளார் ஜெயலலிதா. டிவி தருவோம் என்று தான் திமுக தேர்தல்அறிக்கையில் சொல்லப்பட்டதே தவிர என்ன சைஸ் டிவி தருவோம் என்றுசொல்லவே இல்லை.
அப்படியே 21 இன்ச் டிவியை நாங்கள் தந்தாலும் ஏன் 42 இன்ச் டிவி தரவில்லைஎன்று கேட்கக் கூடியவர் தான் ஜெயலலிதா. சிறிய குடிசைகளில் வாழும் ஏழைமக்களுக்கு 14 இன்ச் டிவி தான் வசதியாக இருக்கும். ஜெயலலிதாவைப் போலபங்களாவாசிகளுக்குத் தான் பெரிய டிவி தேவைப்படும்.
நாங்கள் டிவி தருவோம் என்று தேர்தலின்போது வாக்குறுதி தந்தபோது, அதெல்லாம்தரவே முடியாது, மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள் என்று சொன்னவர் தான் இந்தஜெயலலிதா. ஆனால், ஆட்சிக்கு வந்து வாக்குறுதியை நாங்கள் நிறைவேற்றஆரம்பித்துவிட்டதால் பயந்து போய் அதில் குறை காண துடிக்கிறார் என்று கூறியுள்ளார்கருணாநிதி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications