தந்திரி: ஷோபா, பாடி கார்ட், நண்பர் கைது
Subscribe to Oneindia Tamil
கொச்சி:
சபரிமலை தந்திரி விவகாரத்தில் அழகி ஷோபா ஜார்ஜ் மற்றும் அவரது பாடி கார்டும், நண்பரும் இன்று கைதுசெய்யப்பட்டனர்.
ஷோபா கடந்த ஒரு வாரமாகவே வீட்டுக் காவலில் தான் வைக்கப்பட்டிருந்தார். இன்று தான் முறைப்படி கைதுசெய்யப்பட்டுள்ளார்.தந்திரி மோகனருவுக்கு விபச்சாரப் பெண்களுடன் தொடர்பு இருந்ததை ஒரு கும்பல் படம் பிடித்தது. ஷோபாஜார்ஜ் உள்ளிட்ட விபச்சாரப் பெண்கள் நிர்வாண கோலத்தில் இருக்க, அருகே தந்திரி அலங்கோலமானகோலத்தில் சிக்கினார்.
இதற்கிடையில் ஷோபா ஜார்ஜை வீட்டுக் காவலில் வைத்து போலீசார் விசாரித்தனர். அந்த விசாரணைஅடிப்படையில் இன்று மேலும் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனார்.
கைதானவர்களில் ஒருவர் ஷோபாவுக்கு நெருக்கமான நண்பர் விஜில். மற்றொருவர் ஷோபாவின் பாடி கார்ட்அணி. இந்த இருவரையும் இன்று காலை போலீசார் கொச்சியில் கைது செய்தனர்.
இவர்களை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டுவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications