இலங்கை போர்க் கப்பலுக்கு இந்திய பாதுகாப்பு: வைகோ எதிர்ப்பு
சென்னை:
தமிழர்களை தாக்கி அழிக்க ஈடுபடுத்தப்படவுள்ள இலங்கை கடற்படை கப்பலுக்குஇந்தியா பாதுகாப்பு தரக் கூடாது என பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில்,போர் நிறுத்த ஒப்பந்தத்தை திட்டமிட்டேமீறி உள்ள சிங்கள இனவாத அரசு, தமிழர்கள் மீது தனது தாக்குதலை தீவிரப்படுத்தமுப்படைகளையும் ஏவியுள்ளது. பெண்கள், குழந்தைகள் உள்பட அப்பாவிதமிழர்கள் குண்டுவீச்சால் கொல்லப்படுகின்றனர்.தமிழர்களின் கட்டுப்பாட்டு பிரதேசத்துக்குள் ஊடுவருக் கூடாது என்றும், தாக்குதல்நடத்தக் கூடாது என்றும் விடுதலைப்புலிகள் தெடர்ந்து செய்த எச்சரிக்கையை மீறிஇலங்கை அரசு பீரங்கி தாக்குதலையும், குண்டுவீச்சையும் தொடர்ந்து நடத்துவதால்தமிழர் பகுதிகளையும், தமிழ் மக்களையும் பாதுகாக்க விடுதலைப்புலிகள் பதில்தாக்குதல் நடத்துகின்றனர்.
இந்த சூழ்நிலையில் இலங்கை காவல் துறையைச் சேர்ந்த 44 பேர்களுக்குகோவையில் மத்திய பாதுகாப்பு காவல் துறை தளத்தில் இந்தியா பயிற்சி கொடுக்கின்றசெய்தி அதிர்ச்சி ஊட்டுகிறது.
உடனடியாக இந்த பயிற்சி நிறுத்தப்பட்டு சிங்கள காவல் துறையினரை இலங்கைக்குதிருப்பி அனுப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பன்னாட்டுஊடங்களின் வாயிலாக கிடைத்து உள்ள நம்பகமான தகவல்களின் படி தமிழர்பகுதிகளில் தாக்குதல் நடத்துவதற்காக 854 ஆயுதம் தாங்கிய சிங்கள துருப்புகளைஏற்றிக் கொண்டு இலங்கை கடற்படை கப்பல் ஈடுபடுத்தப்படுகிறது என்ற செய்தியைநான் அறிகிறேன்.
அத்துடன் சம்பந்தப்பட்ட இலங்கை கடற்படை கப்பலுக்கு பாதுகாப்பு கொடுக்கவும்,உதவி செய்யவும் இந்திய கடற்படையின் உதவியை நாடி இலங்கை அதிபர் ராஜபக்சேஇந்திய பிரதமரிடம் பேசியுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.அப்படி ஏதாவது உதவியை இந்தியா இலங்கைக்கு செய்ய முற்பட்டால் அதுமன்னிக்க முடியாத அக்கிரம செயல் ஆகும்.
தமிழர்களுக்கு எதிரான இலங்கையின் ராணுவ நடவடிக்கைக்கு துணை போகும்காரியமாகவே முடியும் என்பதை தெரிவிக்கிறேன். எனவே தமிழர்களுக்கு எதிராகஅப்படிப்பட்ட கொடிய தவறினை இந்திய அரசு செய்ய முற்படாது என்றுநம்புகிறேன்.
இந்தியர்களுக்கு எதிராகவும் தமிழர்களுக்கு எதிராகவும் உள்ள சிங்கள இனவாதகுழுக்களால் ஆட்டுவிக்கப்படும் இலங்கை அரசுக்கு எந்தவிதமான உதவியையும்இந்தியா செய்யக்கூடாது என்பதை வேதனையோடு வலியுறுத்துகிறேன் எனகூறியுள்ளார் வைகோ.












Click it and Unblock the Notifications