ஆடிப் பெருக்கு-காவிரிக் கரைகளில் கோலாகலம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
ஆடி 18 என்று அழைக்கப்படும் ஆடிப் பெருக்கு இன்று தமிழகத்தில் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
காவிரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் விழாவான இந்த கொண்டாட்டம், இம்முறை காவிரியில் வெள்ளம்வழிந்தோடுவதால் மிக மகிழ்ச்சியாக கொண்டாடப்படுகிறது.இதையொட்டி ஆயிரக்கணக்கான மக்கள் இன்று திருச்சி உள்ளிட்ட காவிரிக் கரைப் பகுதிகளின் குவிந்தன்.புதுமணத் தம்பதிகள் புதுத்தாலி மாற்றிக் கொண்டு, சுமங்கலி பூஜையும் நடத்தினர்.
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் காலை முதல் ஏராளமான புதுமணத் தம்பதிகள் காவிரியில் புனிதநீராடினர். இதனால் இந்தப் பகுதியில் மக்கள் வெள்ளமாகக் காணப்படுகிறது.
அதே போல தஞ்சை அருகே திருவையாற்றில் காவிரி ஆற்றின் கரையில் உள்ள அய்யாறப்பர் கோவில் புஷ்படமண்டப படித்துறையிலும் தஞ்சை பெரிய கோவில் புது ஆறு படித்துறையிலும் ஏராளமான மக்கள் சுமங்கலிபூஜை நடத்தினர்.
பெரும்பாலான தமிழக கோவில்களிலும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. தம்பதிகள்கோவிலில் மாலை மாற்றிக் கொண்டனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications