மதானிக்கு ஜாமீன் தரக் கூடாது: உயர்நீதிமன்ற நீதிபதிக்கு மர்ம கடிதம்!
சென்னை:
கோவை குண்டுவெடிப்பு கைதி அப்துல் நாசர் மதானிக்கு ஜாமீன் வழங்கக் கூடாதுஎன்று கூறி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.என். பாஷாவுக்கு மர்ம கடிதம்வந்துள்ளது.
கோவை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைதாகி கோவை மத்திய சிறையில்அடைக்கப்பட்டுள்ளார் கேரளாவைச் சேர்ந்த அப்துல் நாசர் மதானி. அவருக்குசிறைக்குள்ளேயே ஆயுர்வதே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமீபத்தில் மதானிக்கு சிகிச்சை அளிக்கும்மருத்துவமனையின் தலைவரான டாக்டர் ரவீந்திரனுக்கு மிரட்டல் விடுத்து கடிதம்அனுப்பப்பட்டது.
இந் நிலையில் மதானிக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று கூறி சென்னைஉயர்நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷாவுக்கு தற்போது மர்ம கடிதம் வந்துள்ளது.
பாஷாதான் உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனுக்களை விசாரித்து வருகிறார். நேற்று ஒருவழக்கை விசாரித்துக் கொண்டிருந்த நீதிபதி பாஷா,
தனக்கு வந்த மர்மக் கடிதம் குறித்து கூறுகையில், மதானியின் ஜாமீன் மனு முதலில்என்னிடம் வருமா, வராதா என்பதே தெளிவாக தெரியவில்லை. ஆனால்அதற்குள்ளாக எனக்கு மிரட்டல் வந்து விட்டது என்றார்.
நீதிபதி பாஷாவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், அய்யா, மதானியின் உடல்நிலைஅவ்வளவு மோசமாக இல்லை. மதானியின் வயதுடையவர்களுக்கு வருகிற சாதாரணபிரச்சினைகளே மதானிக்கும் உள்ளன.
சிறையிலிருந்து வெளியே வரவேண்டும் என்பதற்காகத்தான் இந்த நாடகத்தைஆடுகிறார் மதானி. சிறையில் அடைக்கப்பட்ட பின்னரும் கூட அவர் தனது போக்கைமாற்றிக் கொள்ளவில்லை.
தனது ஆதரவாளரக்ளை தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுமாறு தூண்டிவிட்டுக்கொண்டுதான் உள்ளார். சிறைக்குள் அவருக்கு சிகிச்சை அளிப்பதை தடைசெய்ய வேண்டும். அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது.
சாகும் வரை அவரை சிறையிலேயே அடையுங்கள். அவர் ஒரு கொலைகாரர்,பைத்தியக்காரர். அவருக்கு ஜாமீன் தர முடிவு செய்தால், நீதியை நீங்கள் கொன்றுபுதைப்பதறகு சமம்.
என்றாவது ஒரு நாள் மதானியின் தீவிரவாதத்திற்கு நீங்களும் இரையாக நேரிடும்.எச்சரிக்கை என்று எழுதப்பட்ட்ள்ளது.
இக்கடிதம் குறித்து நீதிபதி பாஷா கூறுகையில், இப்படிப்பட்ட கடிதங்கள் நீதிபதிகளைஒன்றும் செய்யாது. இந்த நேரத்தில் தேவையானது, மத நல்லிணக்கம். ஒவ்வொருமதத்தவரும், பிற மதத்தினரை மதித்து நடக்க வேண்டும் என்றார் பாஷா.


Click it and Unblock the Notifications
