விழுப்புரம் நகராட்சியில் பெரும் ரகளை: உறுப்பினர்கள் அடிதடி-கவுன்சிலர் மண்டை உடைப்பு
விழுப்புரம்:
விழுப்புரம் நகராட்சிக் கூட்டத்தில் உறுப்பினர்களிடையே பயஙகர மோதல் ஏற்பட்டது. இருககைகளை தூக்கிவீசியும், கடுமையாக கைகலந்தும் கவுன்சிலர்கள் அடித்துக் கொண்டனர். இதில புதிய நீதிக் கட்சி கவுன்சிலர்பிரபுவின் மண்டை உடைந்தது.
விழுப்புரம் நகராட்சியின் அவசரக் கூட்டம் நடந்தது. அதிமுகவினரே நகரசபையில் பெரும்பான்மைஉறுப்பினர்களாக உள்ளனர்.கூட்டத்தில் அதிமுகவைச் சேர்ந்த 15 கவுன்சிலர்களும், திமுக கூட்டணியைச சேர்ந்த 13 கவுன்சிலர்களும் கலந்துகொண்டனர். ஆனால், நெடு நேரமாகியும் நகராட்சித் தலைவர் பன்னீர் செல்வம் கூட்டத்தை ஆரம்பிக்கவில்லை.
இதனால் கோபமடைந்த காங்கிரஸ் கவுன்சிலர் செல்வராஜ், ஏன் இன்னும் கூட்டம் தொடங்காமல் இருக்கிறதுஎன்று கேட்டர். அதற்கு நகராட்சித் தலைவர், ஆணையரை வரச் சொல்லியுள்ளேன். வந்ததும் கூட்டம் தொடங்கும்என்றார்.
ஆனால் ஆணையர் வரவே இல்லை. இதனால் கோபமமாக எழுந்த திமுக உறுப்பினர் பார்த்திபன், கூட்டத்தைநடத்த முடியாத நீங்கள் எல்லாம் எதறகு தலைவராக இருக்கிறீர்கள். பதவியை விட்டு விலகுங்கள் என்றுகோபமாக கூறினார்.
இதையடுத்து அதிமுக கவுன்சிலர்களுக்கும், அவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. அது அடிதடி,மோதலாக மாறியது.
அவ்வளவுதான், இரு தரப்பினரும் இருக்கைகளை தூக்கி வீசியும், சரமாரியாக அடிததுக் கொண்டும மோதலைததொடங்கினர். இந்த ரகளையைப் பார்தத் பெண் கவுன்சிலர்கள் பீதியடைந்து அங்கிருந்து தப்பி ஓடினர்.
அதிமுகவைச் சேர்ந்த நகராட்சித் தலைவர் பன்னீர்செல்வத்தை பிடித்து கீழே தளளிய திமுக கவுன்சிலர்கள்,அவரது இருக்கையை கீழே தூக்கிப் போட்டு உடைத்தனர். திமுகவினரின் ஆக்ரோஷமான தாக்குதலை சமாளிக்கமுடியாமல் அதிமுக கவுன்சிலர்கள் திணறினர்.
இதையடுத்து போலீஸார் உள்ளே புகுந்து திமுகவினரை கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால்முடியவிலலை.போலீஸாரை தள்ளி விட்டு விட்டு அதிமுகவினர் மீது பாய்ந்து சரமாரியாகத் தாக்கினர் திமுகவினர். இந்தமோதலில புதிய நீதிக்கட்சி உறுப்பினர் பிரபுவின் தலையை ஒரு சேர் பதம் பார்த்தது. அதில் அவரது மண்டைஉடைந்தது.
ரத்தம் சொட்ட துடித்த அவரை அதிமுக கவுன்சிலர்கள் பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்து விட்டன். பின்னர்போலீஸார் அவரை மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் திமுக கவுன்சிலர்களை போலீஸார் குண்டுகட்டாகவெளியேற்றினர்.
அதன பின்னர் நகராட்சித் தலைவர் பன்னீர் செல்வம் அவைக்குள நுழைந்து, அனைத்து தீர்மானங்களுமநிறைவேறியதாக அறிவித்துவிட்டு ஓடினார்.
இந்த மோதல் குறித்து நகராட்சித் தலைவர் பன்னீரசெல்வம் கூறுகையில, திமுகவினர் திட்டமிட்டே இந்ததாக்குதலை நடத்தினர். ஆணையரை கூட்டத்திற்கு வரக்கூடாது என்று கூறி விட்டு, இங்கே வந்து கலாட்டாவில்இறங்கியுள்ளனர். திமுகவினர்தான் இந்த ரகளைகக் முழுப் பொறுப்பு என்றார்.
இந்த மோதலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. நகராட்சி வளாகம் முழுவதும் அதிக அளவில்போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications