சிறுதாவூர் நிலம் தலித்களுடையதே: மார்க். கம்யூ
சென்னை:
தமிழகத்தில் தீவிரவாதம் தலை தூக்குகிறது. இதைத் தடுக்க தமிழக அரசு உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் வரதராஜன் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், தமிழகத்தில் இங்கொன்றும் அங்கொன்றுமாக தீவிரவாதம் தலைதூக்கி வருகிறது. தீவிரவாதத்தைத் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.சிறுதாவூரில் உள்ள 53 ஏக்கர் நிலம் தலித் மக்களுக்கு சொந்தமானதுதான். அதைசசிகலா ஆக்கிரமித்துள்ளார். இது குறித்து விசாரணை கமிஷனிடம் விளக்கமாகஎடுத்துச் சொல்வோம்.
இதேபோல பல மாவட்டங்களில் நில மோசடி நடந்துள்ளது. இதையும் மீட்க அரசுநடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் நில உச்சவரம்பு சட்டத்தை முறையாக அமல்படுத்தினால், பல்வேறு நிலமுதலைகளிடம் சிக்கியுள்ள அதிகப்படியான நிலத்தை மீட்கலாம். இதன்மூலம்அரசுக்கு 20 லட்சம் ஏக்கர் நிலம் கிடைக்கும்.
ஏழைகளுக்கு 2 ஏக்கர் தரிசு நிலத்தைக் கொடுக்கவ லியுறுத்துகிறார்களா அல்லதுகொடுக்கக் கூடாது என்கிறார்களா என்பதை ஜெயலலிதாவும், திருமாவளவனும்விளக்க வேண்டும்.
திமுக அரசை மைனாரிட்டி அரசு என்று ஜெயலலிதா சொல்வதில் நியாயமு இல்லை.எல்லாக் கட்சிகளாலும் சேர்ந்து உருவாக்கப்பட்டதுதான் திமுக அரசு.
இலங்கை போலீஸ் அதிகாரிகளுக்கு கோவையில் ராணுவப் பயிற்சி அளிக்கத்தேவையில்லை. இதை மத்திய அரசு தவிர்த்திருக்க வேண்டும்.
தேசிய குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தில் கொடுத்துள்ள வாக்குறுதிகளைநிறைவேற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பிரசார இயக்கம் நடத்தவுள்ளோம்.
இது தொடர்பாக சென்னையில்12ம் தேதி நடைபெறும் பொதுக் கூட்டத்தில் மேற்குவங்க முதல்வர் புத்ததேவ் பட்டசார்யாவும், நாகர்கோவிலில் 20ம்தேதி நடைபெறும்கூட்டத்தில் கேரள முதல்வர் அச்சுதானந்தனும் கலந்து கொள்கின்றனர்.
தமிழகத்தில் இனிமேல் புதிய மாவட்டங்களை அறிவிக்கும்போது, ஏன் உருவாக்கவேண்டும், இதற்கான நோக்கம் என்ன என்பதையும் மக்களுக்கு அரசு விளக்கவேண்டும் என்றார் வரதராஜன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications