ஜனனி: தகரப் பெட்டியில் ரூ 1.4 கோடியை கொண்டு வந்த வங்கி அதிகாரிகள்-நீதிபதி கண்டனம்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

நடராஜனின் தோழி ஜனனியிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 1.40 கோடி பணத்தை இத்துப் போன பழையதகரப் பெட்டியில் பாதுகாப்பற்ற முறையில் போலீஸார் கொண்டு வந்ததற்கு மதுரை போதைப் பொருள் தடுப்புநீதிமன்ற நீதிபதி மாணிக்கம் கடும் கண்டனம் தெரிவித்தார்.

2003ம் ஆண்டு கஞ்சா வழக்கில் கைதான ஜனனியிடம் இருந்து ரூ. 1.40 கோடி பணத்தையும் போலீஸார்பறிமுதல் செய்தனர். இந்தப பணத்தில் ரூ. 30 லட்சம் அளவுக்கு கள்ள நோட்டு இருந்தது.

இது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் தனி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்குவிசாரணைக்காக இந்தப் பணத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில்சிபிசிஐடி தரப்பில் மனு செய்யபப்ட்டது.

இதை விசாரித்த உயர் நீதிமன்றக் கிளை, பணத்தை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்தில், ஒப்படைக்கஇந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு உத்தரவிட்டது. இதையடுதது நேற்று வங்கி அதிகாரிகள் பணத்தை ஒரு பழையடிரங்குப் பெட்டியில் எடுத்துக் கொண்டு நீதிமன்றத்திற்கு வந்தனர்.

பெட்டியைப் பார்த்த நீதிபதி மாணிக்கம் அதிர்ச்சி அடைந்தார். இவ்வளவு பணததை இப்படிப்பட்ட பழைய தகரப்பெட்டியிலா எடுத்து வருவீர்கள்? உங்களுக்கு வேறு பெட்டியே கிடைக்கவில்லையா என்று அதிகாரிகளைப்பார்த்து அவர் கோபமாக கேட்டார்.

தொடர்ந்து, பெட்டியை சீல் வைத்து மூடியுள்ளீர்களா, நல்ல பூட்டு போடப்பட்டுள்ளதா என்று சரமாரியாகக்கேடடார். ஆனால் ஒரு கேள்விக்கும் அதிகாரிகள் பதில் சொல்லாமல் மெளனமாக இருந்தனர்.

இதனால் எரிச்சலடைந்த நீதிபதி உடனடியாகப் போய் வேறு நல்ல பெட்டியை எடுத்து வாருங்கள் என்றுஉத்தரவிடடார். இதைத் தொடர்ந்து அதிகாரிகள் வங்கிக்குச் சென்று வேறு ஒரு பெட்டியை எடுத்து வந்தனர்.

பின்னர் பணம் எண்ணும் இயந்திரம் மூலம் பணக் கட்டுக்கள் எணணப்பட்டு புதிய பெட்டியில் வைக்கப்பட்டன.நீதிபதியும், சில பணக் கட்டுக்களை எடுத்து எண்ணிப் பார்த்தார். மதியம் வரை ரூ. 80 லட்சத்து ஆயிரம் மட்டுமேஎண்ணப்பட்டது.

பிற்பகலுக்கு மேல் மீதப் பணம் எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் பணம்எண்ணப்படவில்லை. இதையடுத்து எண்ணப்பட்ட பணத்தை மட்டும் ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில்உள்ள டிரஷரியில் (கருவூலம்) இருப்பு வைக்க நீதிபதி உததரவிட்டார்.

மீதப் பணத்தை வங்கி அதிகாரிகள் மீண்டும் வங்கிக்கே எடுத்துச் சென்றனர். இன்று மீண்டும் பணத்தைகோர்ட்டுக்கு கொண்டு வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+