ஈராக் எண்ணை ஊழல்: நட்வர்சிங் சிங்குற்றவாளி- பாதக் கமிஷன் அறிக்கை
டெல்லி:
ஈராக் எண்ணெய் ஊழலில் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர்சிங்,அவரது மகன் ஜகத்சிங்குக்கு தொடர்பு உள்ளதாக அதுகுறித்து விசாரிக்கநியமிக்கப்பட்ட நீதிபதி பாதக் கமிஷன் அறிவித்துள்ளது.
![]() |
இதில் பெரும் ஊழல் நடந்ததாகவும், ஐ.நா.பொதுச செயலாளர் கோபி அன்னானின்மகனுக்கு இதில் தொடர்பு இருப்பதாகவும் சர்ச்சை எழுந்தது.
இதுகுறித்து விசாரிக்க வோல்கர் கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷன் தாக்கல்செய்த விசாரணை அறிக்கையில், நட்வர்சிங், அவரது மகன் ஜகத்சிங் ஆகியோரின்பெயர்களும் இடம் பெற்றன.
இருவரும் இத்திட்டத்தின் மூலம் தனிப்பட்ட முறையில் பலன் அடைந்ததாக வோல்கர்கமிஷன் குற்றம் சாட்டியிருந்தது. ஆனால், இந்த முறைகேடுகளை செய்தபோதுநட்வர்சிங் அமைச்சராக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கட்சியின்வெளியுறவுப் பிரிவின் தலைவராக இருந்தார்.
அந்தப் பதவியை பயன்படுத்தி சதாம் ஹூசேனின் ஆட்சியில் இருந்தஅதிகாரிகளுடன் பேசி இந்தத் திட்டத்தின் காண்ட்ராக்ட்களை தனது மகன்தொடர்புடைய நிறுவனங்களுக்குப் பெற்றுத் தந்துள்ளார்.
லோகர் கமிஷன் அறிக்கை வெளியில் வந்தபோது நட்வர் சிங் வெளியுறவுத்துறைஅமைச்சராக இருந்தார்.
இதையடுத்து இந்திய அரசியலில் பெரும் புயல் கிளம்பியது. காங்கிரஸ் கட்சிக்காகத்தான் நட்வர் சிங் இந்த ஊழலைச் செய்து பணம் திரட்டித் தந்தார் என பாஜக குற்றம்சாட்டியது.
இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நட்வர்சிங் பதவி விலகினார்.இதுகுறித்து விசாரிகக ஓய்வு பெறற உச்சநீதிமன்ற நீதிபதி பாதக் தலைமையில் மத்தியஅரசு கமிஷனை அமைத்தது.
நேற்று, நீதிபதி பாதக் தனது விசாரணையை முடித்து பிரதமரிடம் 110 பக்க விசாரணைஅறிக்கையை தாக்கல் செய்தார்.
அதில், நட்வர்சிங் குற்றவாளி என்று பாதக் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும்நட்வர்சிங்கும், ஜகத் சிங்கும் இந்த காண்ட்ராக்டால் நேரடியாக பண லாபம் எதையும்அடையவில் , அதற்கான ஆதாரங்கள் இல்லை என்று பாதக் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் தனது பதவியை (காங்கிரஸ் வெளியுறவுப் பிரிவுத் தலைவர் பதவி)நட்வர் சிங் தவறாக பயனபடுத்தியிருப்பதாக பாதக் குறிப்பிட்டுள்ளார்.
ஈராக்குக்கு நட்வர் சிங், தனது மகன் ஜகத் சிங்குடன் சென்றுள்ளார். இந்தவிவகாரத்தில் ஜகத்சிங்கின் நண்பர் ஆண்டிலீப் சேகால், உறவினர் ஆதித்யா கண்ணாஆகியோர் ஆதாயம் பெற்றுள்ளனர்.
நட்வர்சிங்கும்,அவரது மகனும் சேர்ந்து சேகால், கண்ணா ஆகியோர் இராக்அதிகாரிகள் உதவியுடன் சுவிட்சர்லாந்து நாட்டு எண்ணை நிறுவனத்திடமிருந்து 3ஒப்பந்தங்களைப் பெற உதவியுள்ளனர்.
இதன்மூலம் சேகால் மற்றும் கண்ணா ஆகியோருக்கு எண்ணெய்க்கு உணவு திட்டகாண்ட்ராக்டில் 5 சதவீத கமிஷன் கிடைத்தது. அதாவது 1 லட்சத்து 46 ஆயிரம்அமெரிக்க டாலர்களைப் பெற்றுள்ளனர். அந்தப் பணத்தை 4:1 என்ற விகிதத்தில்இதை அவர்கள் பங்கு போட்டுள்ளனர். இப்பணத்தை சுவிஸ் வங்கியில்போடப்பட்டுள்ளது. (இந்தப் பணம் நட்வர் மற்றும் அவரது மகனுக்கு பின்னர் போய்ச்சேர்ந்திருக்கலாம்)
இந்த சர்ச்சையில் சிக்கிய குரேஷியாவுக்கான முன்னாள் இந்தியத் தூதர் அனில்மத்ரானிககு இந்த ஊழலில்தொடர்பு இல்லை. அவர் நட்வருடன் ஈராக சென்றுள்ளர்,அவ்வளவுதான் என்று பாதக் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அனில் மத்ரானி தான் இந்த விவகாரத்தில் நட்வருக்கு எதிராக சிக்கலை மேலும்பெரிதாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சுவிஸ்சுக்கான இந்தியத் தூதராக இருந்தஅவர் இந்திய தொலைக்காட்சி நிருபருக்கு அளித்த பேட்டியில், நட்வரின் இராக்தொடர்புகள் குறித்து புட்டுப் புட்டு வைத்தார். இதையடுத்து தான் நட்வர் பதவி விலகவேண்டி வந்தது.
ஆனால் பாதக் கமிஷன் அறிக்கையின் மூலம் தான் குற்றமற்றவன் என்றுநிரூபணமாகிவிட்டதாக நட்வர்சிங் கூறியுள்ளார். நானோ என் மகனோ இராக்எண்ணெய் திட்டத்தால் எந்த பண லாபமும் அடையவில்லை என்று பாதக் கமிஷன்கூறிவிட்டது. இதனால் நான் குற்றமற்றவன் என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது என்றுகூறியுள்ளார்.
அதே நேரத்தில் பாதக் கமிஷன் அறிக்கையின் மூலம் இந்த ஊழலுக்கும் எங்களுக்கும்எந்தத் தொடர்பும் இல்லை என்று நிரூபணமாகிவிட்டதாக காங்கிரஸ் கட்சிகூறியுள்ளது.
நட்வர் மூலம் இராக் எண்ணெய் திட்டத்தில் காங்கிரஸ் எந்த பலனையும் பெறவில்லைஎன்பது நிரூபிக்கப்பட்டுவிட்டதாக கட்சியின செய்தித் தொடர்பாளர் அபிஷேக்சிங்க்வி கூறியுள்ளார்.
இதன்மூலம் நட்வரை காங்கிரஸ் கட்சி காப்பாற்றாது என்பது தெளிவாகிவிட்டது.
இந் நிலையில் நட்வரின் மகன் ஜகத் பயன்படுத்தி வந்த மெர்சிடிஸ் பென்ஸ் காரை அமலாக்கப் பிரிவுஅதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். எண்ணெய்க்கு உணவு திட்ட முறைகேடு மூலம் கிடைத்த பணத்தில் தான்இந்தக் காரை ஜகத் வாங்கியதாக அமலாக்கப் பிரிவு கருதுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications