ஏர்ஹோஸ்டஸை கொன்று காதலனும் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை திருவான்மியூரில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஜெட் ஏர்வேஸ் நிறுவன விமான பணிப்பெண்ஷில்பா என்பவர் தனது காதலருடன் பிணமாகக் கிடந்தார்.

அவரை காதலனே கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீஸார்சந்தேகிக்கிறார்கள்.

திருவான்மியூர் சுரக்ஷா அபார்ட்மென்ட்டில் வசித்து வந்தவர் பெங்களூரைச் சேர்ந்தஷில்பா. இவரது தந்தை சம்பத் குமார், தாயார் ஜெயகுமாரி ஆகியோர் பெங்களூரில்வசிக்கின்றனர். சென்னை ஃபிளாட்டில் தனது காதலர் ஜெயந்த்துடன் ஷில்பா வசித்துவந்தார். ஜெயந்த் டெல்லியைச் சேர்ந்தவர். சென்னையில் கால் சென்டரில் வேலை பார்த்து வந்தார்.

ஷில்பாவுடன் ஜெயந்த்தும் கணவன், மனைவி போல சேர்ந்து பிளாட்டில் தங்கியிருந்தனர். இந் நிலையில்ஷில்பாவின் தாயார் ஜெயக்குமாரிக்கு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திலிருந்து போன் வந்தது.

கடந்த சில நாட்களாக ஷில்பா வேலைக்கு வரவில்லை என்றும், அவரது செல்போனும் ஆஃப்செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் பேசியவர்கள தெரிவித்தனர். இதையடுத்து பெற்றோர் ஷில்பாவை தொடர்பகொள்ள முயன்றனர். ஆனால், போன் ஆப் செய்யப்பட்டிருந்ததால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

இதையடுத்து ஜெயக்குமாரி பதறியடித்துக் கொண்டு சென்னைக்கு விரைந்தார். ஷில்பாவின் வீடு உட்புறமாகபூட்டியிருந்து. மேலும் வீட்டிலிருந்து துர்நாற்றமும் வீசியது. ஏதோ அசம்பாவிதம் நடந்திருப்பதை உணர்ந்த அவர்உடனடியாக போலீஸாருக்குத் தகவல் தந்தனர்.

போலீசார் வந்து கதவை உடைத்துப் பார்த்தபோது ஷில்பா படுக்கையில் இறந்துகிடந்தார். ஜெயந்த் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். இருவரது உடல்களும்அழுகிய நிலையில் இருந்தன. இதனால் இருவரும் 4 நாட்களுக்கு முன் தற்கொலைசெய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஷில்பாவின் தாயார் ஜெயக்குமாரியிடம் போலீஸார் விசாரணைநடத்தினர். அதில் தெரிய வந்த விவரங்கள்:

ஷில்பா கர்நாடக மாநிலம் கோலாரில் சமையல் கலை பட்டப் படிப்பு முடித்தார்.அப்போது அதே கல்லூரியில் படித்தவர் தான் ஜெயந்த். இருவரும் கடந்த 1998ம்ஆண்டு முதலே காதலித்து வந்துள்ளனர்.ஷில்பா முதலில் மும்பையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணியில் சேர்ந்தார்.அபபோது ஜெயந்த்தும் அவருடன் சென்றார்.

பின்னர் பெங்களூர் திரும்பி அங்குள்ள கால் சென்டரில் வேலை பார்த்து வந்தார்.ஷில்பாவுக்கு சென்னையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் ஏர் ஹோஸடஸ் வேலைகிடைத்தவுடன் இருவரும் சென்னைக்கு வந்து திருவான்மியூரில் குடியேறினர். இந்தவீட்டுக்கு மாதம் ரூ. 4,500 வாடகையாக செலுததி வந்துள்ளனர்.

இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிடடிருந்தனர். ஆனால் தனியார் விமானநிறுவனத்தில் ஏர் ஹோஸ்டஸாக வேலை பார்ப்பவர்கள் திருமணம் செய்து கொள்ளமுடியாது என்பதால், முறைப்படி திருமணம் செய்யாமல் கணவன், மனைவியாகவாழ்ந்து வந்தனர்.

ஆரம்பத்தில் இதற்கு இரு வீட்டினரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். ஆனால்,இருவரும் பிடிவாதம் பிடிக்க பின்னர் ஒப்புதல் கொடுத்து விட்டனராம். இந்தவிவரங்கள் ஷில்பாவின் தாயாரிடம் இருந்து போலீசாருக்குக் கிடைத்துள்ளன.

அண்டை வீட்டினர் மற்றும் ஷில்பாவின் நண்பர்கள், ஜெயந்தின் நண்பர்களிடம்போலீசார் விசாரித்தபோது கிடைத்த தகவல்களின்படி,

ஷில்பாவுக்கு ஜெயந்த் தவிர வேறு சில ஆண்களுடனும் தொடர்பு இருப்பதாகக்கூறப்படுகிறது. அவர்களில் சிலர் ஷில்பா வீட்டுக்கும் வந்து போயுள்ளனர்.ஷில்பாவுக்கு மது அருந்தும் பழக்கம் உண்டாம். அடிக்கடி தனது ஆண்நண்பர்களுடன் அவர் வீட்டில் மது அருந்துவார் எனத் தெரிகிறது.

கடந்த 8 வருடமாக உயிருக்கு உயிராக பழகி வரும் தன்னை விட்டு விட்டுபலஆண்களுடன் ஷில்பா பழகுவது பிடிககாமல்முதலில் ஷிலபாவை மதுவில் விஷம்கலந்து ஜெயந்த் கொன்றிருக்க வேண்டும். பின்னர் தானும் தூக்குப் போட்டுக்கொண்டு தற்கொலை செய்திருக்க வேண்டும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

ஷில்பா தூங்கப் போகும் முன், அவரை தூங்க வைப்பதறகாக ஜெயந்த் கிடார்வாசிப்பாராம். கிடார் இசையைக் கேட்டபடியே ஷில்பா தூங்கப் போவார் எனபக்கத்து வீடுகளில வசிப்பவர்கள் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+