கள்ளக் காதலுக்கு தடை-கணவரை கொன்ற மனைவி
சேலம்:
சென்னை மாதவரம் மேரியி ன்வழியில், கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்தகணவரை, காதலுடன் சேர்ந்து கொலை செய்த மனைவியை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.
சென்னை அருகே மாதவரத்தில், கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த தனதுகணவரை கள்ளக்காதலன் தாஸுடன் சேர்ந்து கொலை செய்த மேரியை தமிழக மக்கள்யாரும் இன்னும் மறந்திருக்க மாட்டார்கள். இப்போது அதே பாணியில் சேலத்தில் ஒருகொலை நடந்துள்ளது.சேலம் குமரன் தெருவைச் சேர்ந்தவர் வாசுதேவன். பனியன் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். அவரது உடல் சேலம் ஊத்துமலையில் பாறைகளுக்கு மத்தியில்கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உடலைக் கைப்பற்றிய போலீஸார் வாசுதேவனை யார் கொலை செய்தது என்பதுகுறிதது விசாரணை நடத்தி வந்தனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
வாசுதேவனின் மனைவி கார்த்திகாதான் தனது கள்ளக்காதலருடன் சேர்ந்துவாசுதேவனைக் கொன்றுள்ளார். இத்தனைக்கும் கார்த்திகாவும், வாசுதேவனும் காதல்மணம் புரிந்தவர்கள். திருமணத்திற்கு முன்பே இருவரும் சேர்ந்து பனியன்நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.
திருமணத்திற்குப் பின்னர் கோவிந்தசாமி என்பவரது பனியன் நிறுவனத்தில்வேலைக்குச் சேர்ந்தார் கார்த்திகா. அங்கு இன்னொரு பனியன் நிறுவன அதிபரானபரமசிவம் என்பவரின் மகனான குமாருக்கும், கார்த்திகாவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
இருவரும் வேலை பார்த்து வந்த நிறுவனத்திற்குப் பின்புறம் உள்ள அறையில்உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இதுகுறித்து வாசுதேவனுக்கு தெரியவந்தது.அவர் கார்த்திகாவை கடுமையாக கண்டித்துள்ளார்.
ஆனாலும் கள்ளக்காதல் கண்ணை மறைக்க, காதல் கணவரை உதாசீனப்படுததி விட்டுகுமாருடன் கும்மாளம் போட்டு வந்தார் கார்த்திகா.
வாசுதேவன் தொடர்ந்து கார்த்திகாவை கண்டித்து வந்துள்ளார். இதனால் எரிச்சடைந்தகார்த்திகா, அதை குமாரிடம் சொல்ல, அவர் வாசுதேவனை தீர்த்துக் கட்டிவிடலாம்என்று கூறியுளளார். இதற்கு கார்த்திகாவும் சம்மதித்துள்ளார்.
இதையடுத்து வாசுதேவனை கார்த்திகா ஊத்துமலை மலைப் பகுதிக்கு அழைத்துச்சென்றார். அங்கு மறைந்திருந்த குமார், அவரது நண்பர் தங்கராஜு ஆகியோர் சேர்ந்துவாசுதேவனைக் கொலை செய்துவிட்டு உடலை பாறைகளுக்கு மத்தியில் போட்டுவிட்டு வந்தனர்.
இதைத் தொடர்ந்து கார்த்திகா, குமார், தங்கராஜ் ஆகிய மூவரையும் போலீஸார் கைதுசெய்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications