கடத்தல்-கற்பழிப்பு-கல்யாணம்: கரோலின் மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு
சென்னை:
மைனர் பெண் கரோலினை கடத்திச் சென்று கற்பழித்து, கட்டாயக் கல்யாணம்செய்ததாக சென்னை பைனான்சியர் கோவி.கண்ணன் மீது தொடரப்பட்டுள்ளவழக்கில், கரோலினுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனை அறிக்கையை தாக்கல்செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராயபுரத்தைச் சேர்ந்த, கட்டாய ஓய்வுகொடுக்கப்பட்ட ஏட்டு தங்கராஜ் மகள் கரோலின்விவகாரம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. குழப்பங்களும் அதிகரித்துவருகின்றன.இந் நிலையில் இந்த வழக்கில் சிக்கியுள்ள பைனான்சியர் கோவி.கண்ணன் தாக்கல்செய்திருந்த முன் ஜாமீன் மனு உயர்நீதிமன்றத்தில் நீதிபதி பாட்ஷாமுன்னிலையில்விசாரணைக்கு வந்தது.
கோவி.கண்ணன், கரோலின் மற்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞரகள் வாதிட்டனர்.
மூன்று தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கரோலினுக்கு மருத்துவப் பரிசோதனைநடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் முன்ஜாமீன் மனு மீது விசாரணை நடத்த முடியும்.
![]() |
வழக்கைப் பொறுத்தவரையில் மருத்துவப் பரிசோதனைதான் முக்கியமானது. எனவேஅதுவந்த பிறகு விசாரணையை நடத்தலாம். வருகிற 11ம் தேதி வழக்கு ஒத்திவைக்கப்படுகிறது.
அன்றைய தினம் மருத்துவப் பரிசோதனை அறிக்கையை போலீஸார் நீதிமன்றத்தில்தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார் நீதிபதி.
கரோலினை கடத்த கோவி.கண்ணனுக்கு உதவிய 4 போலீசார் (ஒரு பெண் போலீஸ்உள்பட) சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது நினைவுகூறத்தக்கது.
இந் நிலையில் கோவி.கண்ணனால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாககரோலின் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், என் பெற்றோருக்கு திருமணமாகி 16 ஆண்டுகளுக்குப் பின் நான்பிறந்தேன். ஆனால், நான் ஏதோ வளர்ப்பு மகள் என்றும் சொந்த மகள் இல்லைஎன்றும் பொய் செய்திகளை பரப்புகிறார் கோவி.கண்ணன்.
இந்த விவகாரம் வெளியில் வந்தபோது என் முகத்தில் ஆசிட் ஊற்றுவேன் என்று கூடகோவி கண்ணன் மிரட்டினார். போலீஸ், பண பலம் உள்ள தைரியத்திலும் நாங்கள்ஏழைப்பட்டவர்கள் என்பதாலும் இவ்வாறு ஆட்டம் போடுகிறார் கோவி கண்ணன்.
இன்னும் அவர் கைது செய்யப்படாததைப் பார்த்தால் எனக்கு பயமாக உள்ளது. என்வழக்கறிஞரைக் கூட மிரட்டுகிறார்கள். என் உயிருக்கு ஆபத்து உள்ளது.
கோவி கண்ணனுடன் திருவண்ணாமலையைச் சேர்ந்த 17 வயது பெண் மகேஸ்வரிஎன்பவர் இருக்கிறார். அவரை வளர்ப்பு மகள் என்று வெளியில் சொல்லக் கொண்டுஆசை நாயகி மாதிரி வைத்திருக்கிறார்.
இளம் வயது பெண்களை வளைத்துப் போட்டு அனுபவிப்பதில் சுகம் காணும் ஆசாமிகோவிகண்ணன். மகேஸ்வரியிடம் விசாரணை நடத்தினால் நான் பட்ட கஷடங்கள் தெரியவரும் எனறார் கரோலின்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications