தலையில் படீர்: கரூரில் நூதன கோவில் திருவிழா!
கரூர்:
கரூர் மாவட்டம் மேட்டு மகாதானபுரம் மகாலட்சுமி அம்மன் ஆடித்திருவிழாவில்பக்தர்கள் தலையில் பூசாரி தேங்காய் உடைத்து பக்தர்களின் நேர்த்திக் கடனைநிறைவேற்றி வைத்த நூதன நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுதலையில் தேங்காய் உடைத்துக் கொண்டனர்.
கிருஷ்ணராயபுரம் தாலுகாவில் அமைந்துள்ளது மேட்டு மகாதானபுரம். இங்குள்ளமகாலட்சுமி அம்மன்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. காரணம், இந்தியாவிலேயேமகாலட்சுமிக் கென்று இங்கு மட்டும்தான் கோவில் உள்ளது.இந்தக் கோவில் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் மற்றும் குரும்பக் கவுண்டர்கள்ஆகிய சமூகத்தவர்களுக்கு சொந்தமானதாகும். இந்தக் கோவிலின் விசேஷமே,பக்தர்கள் தங்களது தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடனைசெலுத்துவதுதான்.
இந்த நூதன நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சி இன்று, நேற்றல்ல, ஒருநூற்றாண்டுக்கும் மேலாக தொடர்ந்து நடந்து வருகிறது.
தலையில் தேங்காய் உடைப்பதாக நேர்ந்து கொள்ளும் பக்தர்கள் ஆடி மாதம் 1ம்தேதிமுதல்விரதம் இருக்கத் தொடங்குவார்கள். 19ம் தேதி தலையில் தேங்காய் உடைக்கும்வைபவம் நடைபெறும். அன்றைய தினம், காலையில் கோவிலில் அம்மனுக்குசிறபபுப் பூஜை நடைபெறும்.
அதையடுத்து கோவில் பெரிய பூசாரி, சாமியாடியபடி வருவார். வெளியே மொட்டைஅடித்த தலைகளுடன் பக்தர்கள் வரிசையாக அமர்ந்திருப்பார்கள். சாமியாடியபடிவரும் பூசாரி, ஒவ்வொரு பக்தரின் தலையிலும் தேங்காயை உடைத்து அவர்களின்நேர்த்திக்கடனை பூர்த்தி செய்வார்.
இப்படியாக தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடனை செலுத்தும் நிகழ்ச்சிநேற்று மகாலடச்மி அம்மன் கோவிலில் படு விமரிசையாக நடந்தது. கோவில் பெரிய பூசாரி, பெரியசாமி, சாமியாடியபடி கோவில் சன்னிதானத்திலிருந்துவெளியே வந்தார்.
முதலில் குடிபாட்டுக்காரர்கள் எனப்படுவோரின் தலையில் தேங்காயை உடைத்துநிகழ்ச்சியை ஆரம்பித்தார். பின்னர் கோவிலுக்குள் சென்று கையில் கத்தியுடனும்,காலில் இரும்பு ஆணி பதித்த செருப்புடனும் அருள் வந்து ஆடினார்.
பிறகு கோவில் முன்பு உள்ள கருட கம்பத்தில் தீபம் ஏற்பட்டது. இதைததொடர்ந்துவரிசையாக அமர்ந்திருந்த பக்தர்களின் தலையில் தேங்காய் உடைப்பதுஆரம்பமானது. மொத்தம் 617 பேர் தலையில் தேங்காய் உடைக்கப்பட்டது.
மொட்டைத் தலையில் படீர் படீரென சப்தத்துடன் தேங்காய்கள் உடைக்கப்பட்டபோது பக்தர்கள் பெரும் குரலெடுத்து அம்மனை வேண்டிக் கொண்டனர். சிதறியதேங்காய்த் துண்டுகளை பிரசாதமாக எடுத்துக்கொண்டனர். சிலருக்குமண்டையிலிருந்து ரத்தம் வந்தது.
அந்த இடத்தில் பூசாரி மஞ்சள் மற்றும் குங்குமத்தை பூசி விட்டார். சிலருக்குமண்டையில் உடைப்பு ஏற்பட்டது. அவர்களுக்கு மருத்துவமனையில் வைத்து தையல்போடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து அன்னதானம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர்கலந்துகொண்டனர். மொட்டைத் தலையில் தேங்காய் உடைப்பது மூடத்தனம்,இதனால் மூளைக்குப் பாதிப்பு ஏற்படும்.
காட்டு மிராண்டித்தனமான, உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இந்த தேங்காய்உடைக்கும் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று பல்வேறு மனித உரிமைஅமைப்புகள் சில ஆண்டுகளாக கோரிவருகின்றன. இருப்பினும் நீதிமன்றம் இந்தபழக்கத்தை தடை செய்ய முடியாது என்று கூறி விட்டது.
அதே சமயம், சிறுவர்,சிறுமியரின் தலையில் தேங்காய் உடைக்கக் கூடாது என்று அதுஅறிவுறுத்தியுள்ளது. அதன் அடிபபடையில், 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்குதேங்காய் உடைக்கக்கூடாது என்று குளித்தலை தாசில்தார் உத்தரவிட்டிருந்தார்.
இருப்பினும் நேற்றைய நிகழ்ச்சியில் 20 வயதுக்கு உட்பட்ட ஒரு சிறுவனுக்கும்,சிறுமிக்கும் தலையில் தேங்காய் உடைக்கப்பட்டது. மிக பலத்த பாதுகாப்புடன் இந்தநூதன தேங்காய் உடைப்பு நிகழ்ச்சி நடந்து முடிந்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications