ஜெயலலிதா வாங்கிய மார்க் எவ்வளவு?
சென்னை:
பண்பற்றவர்கள் எல்லாம் அமைச்சர்களாக இருப்பது தமிழ்நாட்டின் துரதிர்ஷ்டம் என முன்னாள் முதல்வர்ஜெயலலிதா கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,கடந்த 4ம் தேதி சட்டமன்றத்தில் நடந்த விவாதத்தின்பேது அமைச்சர் பொன்முடியும், பரிதி இளம் வழுதியம் நான்கணக்குப் பாடத்தில் 200க்கு 193 மார்க் வாங்கியதாகவும், எனக்கு முன்னால் உட்கார்ந்து தேர்வெழிதிய மாணவி200க்கு 200 வாங்கியதாகவும் பேசியுள்ளனர்.
கடந்த 31ம் தேதி நான் சட்டமன்றத்தில் பேசுகையில், 1964ம் ஆண்டு மெட்ரிகுலேசன் தேர்வில் கணக்கில் நான்200க்கு 200 வாங்கினேன் என்பதை சொன்னேன். பிரசன்டேச் காண்வெண்ட் சர்ச் பார்க் பள்ளியில் படித்த நான்அப்போது நான் மாநில அளவில் 2வது இடம் பெற்றேன்.
ஒரே ஒரு மதிப்பெண் வித்தியாசத்தில் தான் முதலிடத்தை தவற விட்டேன்.
இதைக் கூட ஒரு விவாதப் பொருளாக்கி சட்டமன்றத்தில் பேசியது கண்டனத்துக்குரியது. மக்களுக்குப் பயன்படக்கூடியவற்றைப் பேசாமல், என்னை சிறுமைப்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த 2 அமைச்சர்களும்பேசியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்.
ஒரு துறைக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சர் அந்தத் துறை சம்பந்தமான கேள்விகளுக்கு பதில் அளிக்கும்போதுசம்பந்தமில்லாதவற்றைப் பற்றிக் பேசக் கூடாது. இதையெல்லாம் மீறி ஒரு அமைச்சர் தனது இலாகாசம்பந்தப்பட்ட கேள்விக்கு பதில் சொல்லும்போது வேறு இலாகா பற்று பேசுவதா?
அதுவும் தனி நபர் விமர்சனங்களை சட்டமன்றத்தில் பேசுவது அவையை கொச்சைப்படுத்தும் செயலாகும்.
நான் மெட்ரிக் தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்கினேன் என்று சொன்னால், அதைக் கூட தாங்கிக் கொள்ளமுடியாமல் இப்படி கீழ்த்தரமாக கொச்சைப்படுத்துகிற பேர்வழிகளை (அமைச்சர்களைத் தான் இப்படிசொல்கிறார்) நாடு இப்போது தான் பார்க்கிறது.
இந்த பண்பற்றவர்கள் எல்லாம் அமைச்சர்களாக இருப்பது தமிழ்நாட்டின் துரதிர்ஷ்டம். இதையே பரிதியும்பொன்முடியும் சட்டமன்றத்துக்கு வெளியே சொல்லியிருந்தால் வழக்குத் தொடர்ந்திருப்பேன் என்பதையும்தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications