பயிற்சி ரத்து: கோவையிலிருந்து பெங்களூர் சென்ற சிங்கள போலீஸார்-பிரதமருடன் வைகோ பேச்சு!
கோவை:
தமிழகத்தில் எழுந்த கடும் எதிர்ப்பையடுத்து கோவையில் பயிற்சியில்ஈடுபடுத்தப்பட்டிருந்த 44 இலங்கை போலீஸாரும் வியாழக்கிழமை இரவேகோவையிலிருந்து வெளியேற்றப்பட்டு பெங்களூர் கொண்டு செல்லப்பட்டனர்.
ஆனால், அவர்களுக்கு இந்தியாவில் எங்குமே பயிற்சி தரக் கூடாது என இன்றுபிரதமர் மன்மோகன் சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.கோவையில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் பயிற்சி மையத்தில், இலங்கையைச்சேர்ந்த 44 போலீஸாருக்கு கலவரத்தை அடக்குவது உள்ளிட்டவற்றில் பயிற்சிஅளிக்கப்பட்டு வந்தது. மொத்தம் 15 நாள் பயிற்சி முகாமுக்கு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.
ஆனால் இலங்கையில் அப்பாவித் தமிழர்களை சிங்கள ராணுவம் கொன்று குவித்துவரும் நிலையில, தமிழகத்தில், சிங்கள போலீஸாருக்கு பயிற்சியா என்று அத்தனைஅரசியல்கட்சிகளும் பொங்கி எழுந்தன. திராவிடர் கழகமோ, கோவைமையத்தின்முன்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தது.
இப்பிரச்சினை சட்டசபையிலும் படு சூடாக விவாதிக்கப்பட்டது. மதிமுக, விடுதலைச்சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் ஆவேசமான பேச்சுக்களுக்கு முதல்வர்கருணாநிதியும் உடன் பட வேண்டியதாயிற்று. விடுதலைப் புலிகளுக்கு எதிரானகருத்தை கொண்டுள்ள அதிமுகவே, இப்பிரச்சினையில் மத்திய அரசையும்,மாநிலஅரசையும் எதிர்த்துக் குரல் கொடுத்து வெளிநடப்பும் செய்தது.
பிரச்சினை பெரிதாவதை உணர்ந்த மத்திய அரசு சிங்கள போலீஸாருக்கு கோவையில்கொடுக்கப்பட்டு வந்த பயிற்சியை ரத்து செய்தது. 44 பேரும், வியாழக்கிழமை இரவுசி.ஆர்.பி.எப். பேருந்துகளில் ஏற்றப்பட்ட பலத்த பாதுகாப்புடன் அங்கிருந்துகொண்டு செல்லப்பட்டனர்.
அவர்கள் எங்கே கொண்டு செல்லப்படுகிறார்கள் என்பது தெரியாமல் இருந்து வந்தது.ஆனால் தற்போது அத்தனை பேரும் பெங்களூரில் தங்க வைக்கப்பட்டுளளதாகதெரிய வந்துள்ளது.
இதுகுறித்து கோவை சி.ஆர்.பி.எப். மைய முதல்வரும், டிஐஜியுமான ஜார்ஜ்பிரான்சிஸ் கூறுகையில், இலங்கையைச் சேர்ந்த நான்கு உயர் அதிகாரிகள் மற்றும்இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய 44 பேருக்கு இங்கு பொதுஇடங்களில் கலவரம் ஏற்பட்டால் எப்படி அடக்குவது என்பது குறித்து பயிற்சிஅளிககப்பட்டு வந்தது.
15 நாட்களுக்கு அவர்களுக்குப் பயிற்சி தர திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால்தற்போது 5 நாட்களிலேயே பயிற்சியை முடிக்கச் சொல்லி மத்திய உள்துறைஎங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இதனால் பயிற்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.அனைவரும் பெங்களூருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு வேறு எங்கேனும் பயிற்சிஅளிக்கப்படுமா என்பது குறித்து எனக்குத்தெரியாது என்றார் பிரான்சிஸ்.
கோவையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள சிங்கள போலீஸாருக்கு வேறுமாநிலத்தில் வைத்து பயிற்சி அளிக்கப்படும் எனத் தெரிகிறது. இருப்பினும்தற்போதைய நிலையில் சிங்கள போலீஸாருக்கோ அல்லது ராணுவத்தினருக்கோஇந்தியாவின் எந்தப் பகுதியிலும் பயிற்சி கொடுக்காமல் மத்திய அரசு தவிர்ப்பதேநல்லது என்ற எண்ணம் தமிழக அரசியல் கட்சிகளிடையே நிலவுகிறது.
பிரதமருடன் வைகோ பேச்சு:
இந் நிலையில் இன்று காலை பிரதமர் மன்மோகன் சிங்குடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசினார்,
அப்போது இலங்கையில் தமிழர் பகுதிகள் மீது இலங்கை ராணுவமும் கடற்படையும்விமானப் படையும் தாக்குதல் நடத்தி வருகின்றன. எதிர் தாக்குதலில் புலிகள்ஈடுபட்டுள்ளனர். இந் நிலையில் கோவையில் வைத்து இலங்கை போலீசாருக்குபயிற்தி அளிக்கப்பட்டது தமிழர்களின் உள்ளங்களை காயப்படுத்திவிட்டது.அவர்களை திருப்பி அனுப்ப வேண்டும் என எங்கள் எம்பிக்கள் உங்களிடம்கோரிக்கை வைத்தனர்.
தற்போது கோவையில் இருந்து சிங்கள போலீசார் அனுப்பப்பட்டுவிட்டாலும்,அவர்களுக்கு இந்தியாவில் தொடர்ந்து பயிற்சியளிக்கப்படுவதாக அறிகிறேன்.இந்தியாவில் எங்கு பயிற்சி அளித்தாலும் அது தமிழர்களது உள்ளங்களைபுண்படுத்தும் செயல் தான். எனவே அவர்களுக்கு இந்தியாவில் எங்குமே பயிற்சி தரக்கூடாது என்று வைகோ கோரிக்கை வைத்தார்.
இது குறித்து பரிசீலிப்பதாக வைகோவிடம் பிரதமர் கூறியுள்ளார்.
மேலும் இலங்கை தமிழ் எம்பிக்களை நீங்கள் சந்திக்க வேண்டும் என்ற என்கோரிக்கையையும் நிறைவேற்ற வேண்டும், அது தொடர்பாக அந்த எம்பிக்கள்உங்களுக்கு கடிதமும் அனுப்பியுள்ளனர் என்று வைகோ பிரதமரிடம் கூறினார்.
அந்தக் கடிதம் வரட்டும், கவனிக்கிறேன் என்று பிரதமர் உறுதியளித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications