புதுவை முதல்வருக்கு பைக் பரிசு!
பாண்டிச்சேரி:
புதுவை முதல்வர் ரங்கசாமியின் பிறந்த நாளையொட்டி காங்கிரஸ் மற்றும் பல்வேறுகட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் புத்தம் புதிய மோட்டார் சைக்கிளை பிறந்த நாள்பரிசாக கொடுத்து ரங்கசாமியை அசத்தினர்.
ரங்கசாமி தனது 57வது பிறந்த நாளை வெள்ளிக்கிழமை கொண்டாடினார்.இதையொட்டி காங்கிரஸ் தலைவர்கள், பிரமுகர்கள், எம்.எல்.ஏக்கள் ஆகியோர்ரங்கசாமிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏக்களும் கட்சிபாகுபாடின்றி முதல்வருக்கு நூதனமான பரிசைக் கொடுத்தனர். அதாவது புத்தம் புதியமோட்டார்சைக்கிள் ஒன்று முதல்வருக்குப் பிறந்த நாள் பரிசாக கொடுக்கப்பட்டது.
இதைப் பார்த்து ஆச்சரியமடைந்த ரங்கசாமி, எம்.எல்.ஏக்களுக்கு ஆச்சரியம் தரும்வகையில், புதிய பைக்கிலேயே தனது வீடு வரை சென்று அசத்தினார். புதுவைமுதல்வர் ரங்கசாமி படு வித்தியாசமானவர். ரொம்ப ரொம்ப எளிமையானவர்.
சட்டசபைக்கு மோட்டார் சைக்களில் தான் பெரும்பாலும் வருவார். அதே போலதிடீரென பைக்கை எடுத்துக் கொண்டு நகர் வலம் செல்வார். ஏதாவது டீக்கடையாகபார்த்து வண்டியை நிறுத்தி விட்டு ஜாலியாக மக்களிடம் பேசுவார்.
சிவாஜி கணேசனின் தீவிர ரசிகர். சிவாஜிக்கு சிலை வைத்த முதல் மாநிலம் என்றபெருமையை புதுவை பெறுவதற்கு ரங்கசாமி தான் காரணம். ரங்கசாமியின் தீவிரமுயற்சியால் தான் புதுவை மாநிலத்தில், கிழக்கு கடற்கரைச் சாலையில் சிவாஜியின்முழு உருவச் சிலை நிறுவப்பட்டது.
இந்த சிலையை வடித்த அதே சிற்பி தான் சென்னையில் வைக்கப்பட்டுள்ள சிவாஜிசிலையையும் வடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications