தனுஷ்கோடி ஆதித்தன் தொடர்ந்து கவலைக்கிடம்- வலது கை அகற்றம்!
தூத்துக்குடி:
சாலை விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளமுன்னாள் மத்திய அமைச்சர் தனுஷகோடி ஆதித்தனின் உடல் நிலை மிகவும்கவலைக்கிடமாக உள்ளது. பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ள அவருக்குவலது கை சிதைந்து போய்விட்டதால் அந்தக் கை அகற்றப்பட்டுள்ளது.
நெல்லையிலிருந்து மனைவி, மகள், உறவினர்களுடன் காரில் வந்துகொண்டிருந்தபோது தனுஷ்கோடி ஆதித்தனின் கார், டேங்கர் லாரியுடன் மோதி,சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில் தனுஷ்கோடி ஆதித்தனின் மனைவி இந்திரா தேவி பலியானார். அவரது உடல்நெல்லையில் உள்ள வீட்டுத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன்உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த விபத்தில் ஆதித்தன் மற்றும் மகள் சிந்தியா உள்ளிட்டோர் காயமடைந்துதூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஆதித்தனின் உடல்நிலை தொடர்ந்து மோசமாக இருப்பதாக அவருக்கு சிகிச்சைஅளித்து வரும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
அவரது இடுப்பு, தொடை, கைகள் ஆகியவற்றில் கடுமையான எலும்பு முறிவுஏற்பட்டுள்ளது. வலது கையில் நரம்புகள் துண்டிக்கப்பட்டதோடு கையும்சிதைந்துவிட்டது. கையை அகற்றாவிட்டால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும்எனபதால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
இதற்காக மதுரை அப்போலோ மருத்துவமனையிலிருந்து டாக்டர்கள் குழு ஒன்றுதூத்துக்குடி வந்தது. ஆதித்தனின் ரத்த அழுத்தம் சீராக இல்லாத காரணத்தால்ஞாயிற்றுக்கிழமை மாலை வரை அறுவைச் சிகிசசையை மேற்கொள்ள முடியவில்லை.
பின்னர் இரவு 8.30 மணியளவில் அறுவைச் சிகிச்சை நடந்தது. 16 பேர் கொண்டமருத்துவர் குழு அறுவைச் சிகிச்சையில் ஈடுபட்டு கையை அகற்றியதோடு,பாதிக்கப்பட்ட பிற உறுப்புகளை சீர் செய்தனர்.
அறுவை சிகிச்சைக்குப் பின்னரும் ஆதித்தனின் உடல் தொடர்ந்து கவலைக்கிடமாகஇருப்பதாகவும், தீவிர கண்காணிப்பில் அவர் வைக்கப்பட்டுள்ளார் என்றும்தெரிவிக்கப்பட்டுளளது.
குமரி அனந்தனுக்கு மாரடைப்பு:
இதற்கிடையே தனுஷ்கோடி ஆதித்தன் மனைவி இறந்தது தொடர்பாக துக்கம் கேட்கரயிலில் வந்து கொண்டிருந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தனுக்குமாரடைப்பு ஏற்பட்டதால் அவர் திண்டுக்கல் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஈரோட்டிலிருந்து ரயில் மூலம் தூத்துக்குடிக்கு வந்து கொண்டிருந்தார் குமரி அனந்தன்.இன்று காலை திண்டுக்கல் அருகே ரயில் வந்தபோது அவருக்கு மாரடைப்புஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக திண்டுக்கல் ரயில நிலையத்தில் ரயில்நிறுத்தப்பட்டது.
ஆம்புலன்ஸ் மூலம் அவர் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆதித்தன் உடல் நிலை குறித்து வாசனிடம் முதல்வர் கருணாநிதி தொலைபேசியில்விசாரித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications