பஹ்ரைன் விபத்தில் பலியானவர்கள் கிராமத்தில் கந்து வட்டிக் கொடுமை: தந்தை,மகன் கைது!
கடலூர்:
பஹ்ரைன் தீ விபத்தில் 3 உயிர்களைப் பலி கொடுத்த கடலூர் மாவட்டம் சேதுவராயன்குப்பம் கிராமத்தில் அநியாய வட்டிக்கு பணம் கொடுத்து வந்த தந்தை, மகனைபோலீஸார் கைது செய்தனர்.
பஹ்ரைன் நாட்டில் சமீபத்தில் நடந்த தீ விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 16 பேர்பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சோகம் மறைவதற்குள் இன்னொரு பிரச்சினைஎழுந்துள்ளது.பஹ்ரைன் தீ விபத்தில் இறந்த ராஜவேல், ராஜா, பாலுச்சாமி ஆகியோர் சேதுவராயன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த கனகசபை என்பவரும்அவரது மகன் அசோகன் என்பவரும் இக் கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு கந்துவட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளனர்.
வெளிநாடுகளுக்குப் போக விரும்புபவர்கள் இவர்களிடம்தான் பணத்தை வாங்கிக்கொண்டு செல்வார்களாம். ஆனால் வாங்கிய தொகையை விட பல மடங்கு பணத்தைதிரும்பக் கறப்பது இவர்களது வழக்கம்.
இப்போதும் கூட பலியான 3 பேரின் குடும்பத்தினரையும் பணம் கேட்டு தந்தையும்,மகனும் மிரட்டி வந்தனர். பலியானவர்கள் குடும்பத்துக்கு அரசு கொடுத்த நிவாரணத்தொகையான ரூ. 2 லட்சத்தைத் தந்துவிடும்படி மிரட்டியுள்ளனர்.
இறந்த 3 பேரும் பஹ்ரைன் செல்வதற்காக ரூ. 1.5 லட்சம் முதல் இரண்டரை லட்சம்வரை கடன் வாங்கியிருப்பதாகத் தெரிகிறது.
இந் நிலையில் கனகசபையிடம் தான் 10 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய ரூ. 40,000பணத்திற்குப் பதில் இபபோது ரூ. 1.40 லட்சம் பணத்தை அவர் திரும்பக் கேட்பதாகரங்கநாதன் என்பவர்மாவட்ட ஆட்சித் தலைவர் ககந்தீப் சிங் பேடிக்கு புகார்அனுப்பினார்.
இதுகுறித்து விசாரணை நடத்துமாறு மாவட்ட காவலதுறைக் கண்காணிப்பாளருக்குஆட்சித் தலைவர் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து கனகசபையும்,அசோகனும்கைது செய்யப்பட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications