பிற்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு-உடனேஅமலாக்க பிரதமருக்கு கருணாநிதி கடிதம்
டெல்லி:
உயர் கல்வியில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை ஒரே கட்டமாக, எல்லா கல்விநிலையங்களிலும் உடனடியாக அமல்படுத்த வேண்டும், இதற்காக அவசர சட்டம் கொண்டு வர வேண்டும், இந்தவிஷயத்தில் முற்பட்ட வகுப்பினரின் நெருக்குதல்களுக்கு அடிபணியக் கூடாது என பிரதமருக்கு முதல்வர்கருணாநிதி கடிதம் அனுப்பியுள்ளார்.
உயர் கல்வியில் இட ஒதுக்கீடு கொண்டு வரும் மத்திய அரசின் திட்டத்துக்கு டெல்லி, குஜராத், மும்பை,பெங்களூர் உள்ளிட்ட சில இடங்களில் உயர் கல்வி மையங்களைச் சேர்ந்த ஒரு பிரிவு மாணவர்கள் எதிர்ப்புத்தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதை மண்டல்-2 எதிர்ப்புப் போராட்டம் என மீடியாக்கள் வர்ணித்தன.ஆனால், தமிழகத்தில் இந்தப் போராட்டங்களுக்கு எந்த ஆதரவும் கிடைக்கவில்லை. மாறாக இட ஒதுக்கீடுக்குஆதரவாகவும், இட ஒதுக்கீட்டை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்களுக்கு எதிராகவும் தான் பேரணிகள்நடந்தன.
இந் நிலையில் இட ஒதுக்கீட்டை அமலாக்குவது தொடர்பாக ஆராய முன்னாள் கர்நாடக முதல்வர் வீரப்பமொய்லி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு தனது இடைக்கால அறிக்கையை மத்தியஅரசிடம் சமர்பித்துள்ளது.
இதற்கிடையே இட ஒதுக்கீட்டை ஒரே கட்டமாக அமலாக்குவது சாத்தியமில்லை என்றும் அதை படிப்படியாகவேஅமலாக்க முடியும் எனவும் ஐஐஎம், ஐஐடிக்களின் தலைவர்கள் கூறி வருகின்றனர்.
இந் நிலையில் திமுக தலைவர் கருணாநிதி பிரதமருக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில்,
மத்திய அரசின் கீழ் உள்ள எல்லா கல்வி நிலையங்களிலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீட்டை எல்லாமட்டத்திலும் அமல்படுத்த வேண்டும் என்று நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் நாம் அனைவரும் வாக்குறுதிஅளித்தோம்.
அந்த வாக்குறுதிக்கு ஆதரவாக மக்கள் அளித்த தீர்ப்பை நாம் மதிக்க வேண்டும். 1950ல் இருந்தே மத்திய, மாநிலஅரசுகளின் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டு வருகிறது. 40ஆண்டுகளுக்கும் மேலாக சமூக நீதியை வழங்க சில பிரிவினர் மறுத்து வருகின்றனர்.
இது பிற்படுத்தப்பட்டவர்களின் மனித உரிமைகளை மறுப்பதற்கு சமம். அரசியல் சட்டத்தின் 340வது பிரிவின்கீழ் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டிய கட்டாயம் என காகா கலேல்கர் கமிஷனும்,மண்டல் கமிஷனும் உறுதியுடன் பரிந்துரைத்தபோதும் கூட நாம் நியாயமற்ற முறையில், இட ஒதுக்கீடு தரலாமாகூடாதா என்று இன்னும் விவாதம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.
நாட்டின் மக்கள் தொகையில் வெறும் 5 முதல் 10 சதவீதம் வரையே உள்ள இட ஒதுக்கீடு எதிர்ப்பாளர்களின்நியாமயற்ற கோரிக்கையை மத்திய அரசு ஏற்கக் கூடாது.
பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை படிப்படியாக அமலாக்கலாம் என அவர்கள் யோசனைகூறுகிறார்ள். பிற்பட்டவர்களில் பொருளாதாரரீதியில் வசதி படைத்தவர்ளுக்கு இட ஒதுக்கீடு கூடாதுஎன்கிறார்கள்.
இட ஒதுக்கீட்டை அமல்படுத்தினால் பொதுப் பட்டியலில் உள்ள இடங்களை அதிகரிக்க வேண்டும் என்கிறார்கள்.
இவர்களது இந்தக் கோரிக்கைகளை எல்லாம் ஏற்றால் நசுக்கப்பட்ட மக்களை மேலும் நசுக்கி, ஆதிக்க சக்திகளின்ஆதிக்கம் தான் மேலும் அதிகரிக்கும்.
பிற்படுத்தப்பட்டவர்களின் பணக்காரன், ஏனை என்று பிரித்துப் பார்க்கும் இவர்கள் முற்பட்ட வகுப்பினரில்ஏழைகள், பணக்காரர்கள் என்று பிரித்து பாகுபாடு பார்க்காமல் இருப்பது விந்தையாக உள்ளது.
பிற்பட்டவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிப்பது தான் நசுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம்வழங்குவதற்கான ஒரே வழி. இதனால் அதை எந்தத் தாமதமும் இன்றி உடனடியாக அமலாக்க வேண்டும்.
நாம் ஆட்சிக்கு வர காரணமாக இருந்தவர்கள் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் தான். அவர்களால்தான் நாம் ஆட்சியில் இருக்கிறோம். நாம் அவர்களுக்கு உரிமைகள் பெற்றுத் தருவோம் என்று நம்பி நம்மைஆட்சியில் அமர்த்தியுள்ளார்கள்.
இதனால் இட ஒதுக்கீட்டை ஒரே கட்டமாக உடனடியாக அமலாக்க வேண்டும். இதற்காக அவசர சட்டத்தைமத்திய அரசு கொண்டு வர வேண்டும். இதில் யாருடைய நெருக்கடிக்கும் நாம் பணிய வேண்டியதில்லை.
இவ்வாறு தனது கடிதத்தில் கருணாநிதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications