உமாதேவி என்னை பழி வாங்குகிறார்-ஹரீஷ்
சென்னை:
![]() |
தன் மனைவி உமாதேவி வேண்டுமென்றே வரதட்சணை புகார் கொடுத்து என்னை பழிவாங்குகிறார் என பின்னணி பாடகரும் நடிகருமான ஹரீஷ் ராகவேந்தரா கூறியுள்ளார்.
அவர் கூறுகையில்,
உமாதேவியை 2003ம் ஆண்டு திருமணம் செய்தேன். எனது துரதிஷ்டம் அவர்சந்தேகப் பெண்மணியாக அமைந்தார். கலை உலகில் உள்ளவர்களுக்கு ஆண், பெண்வித்தியாசம் இல்லாமல் பழகும் சந்தர்ப்பங்கள் அதிகம். இதை சந்தேகப்பட்டார்.இதனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
![]() |
அவரும் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்தார். முப்பை, டெல்லி, லண்டனுக்குதனியாகச் சென்று வருவார். பலமுறை இரவு நேரங்களில் உடன் பணிபுரிபவர்களுடன்வீட்டுக்கு வருவார்.
அப்போது நான் சந்தேகப்பட்டதில்லை. ஆனால் அவர் என்னை சந்தேகவார்த்தைகளால் குத்தி கிழித்தார். பின்னர் கோபித்துக் கொண்டு மலேசியாவுக்குசென்று விட்டார். அங்கு கிரிமினல் வழக்கறிஞரான அவரது சகோதரியுடன் சேர்ந்துஎன்னை பழிவாங்க, வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக வழக்குதொடர்ந்தார்.
வழக்கு பொய்யானது என்று நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. திருமணத்தைபதிவு செய்த விருகம்பாக்கம் ரிஜிஸ்டர் அலுவலகத்தில் வரதட்சணை வாங்கவும்இல்லை, கொடுக்கவும் இல்லை என்று அவர்கள் கையெழுத்து போட்டுகொடுத்திருக்கிறார்கள். அது பதிவேட்டில் உள்ளது.இவ்வளவு தூரம் வந்த பிறகு இனி அவருடன் வாழ முடியாது என்று விவாகரத்துவழக்கு போட்டேன். அந்த வழக்கில் செப்டம்பர் 11ம் தேதி தீர்ப்பு வர இருக்கிறது.
விவகாரத்து கிடைத்து விட்டால் தொந்தரவு கொடுக்க முடியாது என்பதற்காகஇப்போது மீண்டும் புகார் கொடுத்துள்ளார். வரதட்சனை கொடுமைக்கு எதிரான சட்டம்பெண்களின் பாதுகாப்புக்காக கொண்டு வரப்பட்டது. ஆனால் உமா தேவி என்னைபழிவாங்க அதைப் பயன்படுத்துகிறார்.
2 வருடம் மனைவியை பிரிந்து அவளை பார்க்காமல் வாழும் என்னால், எப்படிவரதட்சணை கேட்டு சித்ரவதை செய்ய முடியும்? என் புகழை கெடுத்து, எனக்கும் என்குடும்பத்திற்கும் மன உளைச்சலை தர வேண்டும் என்பது அவர்களது நோக்கம்.
அதனால் தான் நல்ல நண்பராக பழகிவரும் பெண்ணை (டிவி நடிகை பிரதீபா) கூட,தப்பாக இணைத்து பேசி அவரது குடும்பத்திற்கும் இடையூறு ஏற்படுத்தமுயற்சிக்கிறார்.
எனது வயதான பெற்றோர் இதனால் துயரத்திற்கு ஆளாகி உள்ளனர். என்னையும் என்குடும்பத்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தி வரும் உமாதேவி மீது மான நஷ்டவழக்கு தொடர இருக்கிறேன் என கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?














Click it and Unblock the Notifications