தமிழக-கர்நாடக எல்லை பகுதியில் கிடந்த தப்பி ஓடிய கைதியின் உடல்
கிருஷ்ணகிரி:
போலீசாரிடம் இருந்து தப்பி ஓடிய கைதி தமிழக-கர்நாடக எல்லை பகுதியில் மர்மமான முறையில் கை, கால்கள்,தலை தனித்தனியாக வெட்டப்பட்டு கிடந்தார்.
ஓசூரை சேர்ந்த வெங்கடேசன் (30) மீது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 கொள்ளை வழக்குகள் பதிவாகி உள்ளன.கடந்த 2 ஆண்டுகளாக சேலம் மத்திய சிறையில் இருந்த இவரைை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தர்மபுரிகொண்டு சென்றனர்.அப்போது தர்மபுரி பஸ் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார். இவரைைப் பிடிக்க போலீசார் தனிப்படைக்அமைத்து தேடி வந்தனர். இந் நிலையில் தமிழக எல்லைப் பகுதியான தளியை அடுத்த பேளாளம் என்றகிராமத்தில் வெங்கடேசனின் உடல் கிடந்தது. இவனது தலை கார்நாடக மாநிலம் ஆரவள்ளி பகுதியிலும், 2கால்கள் கோடவள்ளி பகுதியிலும் கிடந்தன.
வெங்கடேசனின் கள்ளக் காதலியின் புதுக் காதலன் அல்லது அவனது கூட்டாளிஇந்தக் கொலையை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்
வெங்கடேசன் தனது கள்ளக் காதலி பத்மா பெயரை இடது கையில் பச்சை குத்திஇருந்தான். அந்தப் பெண் பெங்களூர் நிமான்ஸ மருத்துவமனையின் பின்புறம்வசித்து வந்தார்.
இந்தப் பெண்ணின் கணவன் ஆட்டோ டிரைவர். கணவனை பிரிந்த பத்மாவுக்கும்,வெங்கடேனுக்கும் கடந்த 10 ஆண்டுகளாக தொடர்பு இருந்து வந்தது.
சிறையிலும் தன் கூட்டாளிகளிடம் பத்மா பற்றி வெங்கடேசன் நிறைய கூறி உள்ளான்.ஜெயிலில் இருந்து விடுதலையான இந்த கூட்டாளிகளில் சிலர் பெங்களூர் சென்றுபத்மாவை சந்தித்துள்ளனர். அப்போது அவர்களுடன் பத்மாவுக்கு தொடர்புஏற்பட்டுள்ளது.
இதை அறிந்து டென்சனில் இருந்துள்ளார் வெங்கடேசன். இந் நிலையில் தான்போலீஸ் பிடியில் இருந்து தப்பி கூட்டாளிகளை கொல்ல அவர்களை தேடிச்சென்றுள்ளான். அப்போது தான் வெங்கடேசன் கொலை செய்யப்பட்டுள்ளான் எனபோலீசார் கருதுகின்றனர்.
வெங்கடேசன் கொல்லப்பட்ட இடத்தில் இருந்த ஒரு கடிதத்தையும் போலீசார்கைப்பற்றினார்கள். அந்த கடிதத்தை வெங்கடேசனின் ஜெயில் கூட்டாளியானபெங்களூர் சர்ஜாபுரா பகுதியை சேர்ந்த இன்னொரு வெங்கடேசன் எழுதி இருந்தான்.தெலுங்கு மொழியில் அந்த கடிதம் எழுதப்பட்டு இருந்தது.
அந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் சர்ஜாபூர் வெங்கடேசனை பிடிக்க தனிப்படைபோலீசார் பெங்களூரில் முகாமிட்டுள்ளனர்.
இதே போல பத்மாவைப் பிடிக்கவும் இன்னொரு தனிப்படை போலீசார் பெங்களூரில்முகாமிட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications