சிறுதாவூர் நிலம்-விவரம் தருவோருக்கு பாதுகாப்பு
சென்னை:
சிறுதாவூர் நில விவகாரம் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி சிவசுப்பிரமணியன் கமிஷன் தனதுவிசாரணையைத் தொடங்கியுள்ளது. இந்த நிலம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் தகவல்களை கமிஷனுக்குஅனுப்பி வைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் சிறுதாவூரில் உள்ள ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்குச் சொந்தமானதாக கருதப்படும்பங்களாவுக்கு அருகே, தலித் மக்களுககுச் சொந்தமான 54 ஏக்கர் நிலததை சசிகலாவும், ஜெயலலிதாவும் சேர்ந்துஆக்கிரமித்து விட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.இந்த நிலத்தை மீட்டு மீண்டும் தலித் மக்களுக்கே கொடுக்க வேண்டம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிமுதல்வர் கருணாநிதிக்கு கோரிக்கை விடுத்தது. இதைத் தொடர்ந்து ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிசிவசுப்பிரமணியம் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் கமிஷனை கருணாநிதி அமைத்தார்.
இந்த ஆணையம் தற்போது முதல் கட்டப் பணிகளை தொடங்கியுள்ளது. நில அபகரிப்பு தொடர்பானஆவணங்கள், தகவல்களை ஆணையத்திற்கு அனுப்பி வைக்கலாம் என ஆணையம் அறிவிப்புவெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பின் விவரம்:
நிலங்கள் அபகரிக்கப்பட்டதாகக் கூறப்படும் புகார்களின் நிலை, அபகரிக்கபபட்ட நிலங்கள் அரசு புறம்போக்குநிலங்களா அல்லது வேறு பிரிவுகளைச் சேர்ந்தவையா?, நிலத்தை அபகரித்தவர்களின் விவரங்கள் மற்றும்அவர்கள் யார் என்ற விவரம்,
நிலஙகள் பதிவு செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் பட்டா மாற்றம் நடந்தற்கான ஆவணங்களை திரட்டுதல்,நிலங்களை அபகரிக்க மற்றும் நிலஙக்ளை பதிவு செய்ய அதிகார துஷ்பிரயோகம் செய்யப்பட்டதா? ஆகியஅம்சங்கள் குறித்து ஆணையம் விசாரிக்கும்.
இந்த மோசடி அபகரிப்புதொடர்பான ஆவணங்கள், ஆதாரங்கள் வைத்திருப்போர் வரும் 25ம் தேதி மாலை 5.30க்குள் கூவம் இல்லம், சுவாமி சிவானந்தா சாலை, சென்னை எனற முகவரியில் செயல்படும் ஆணையத்திடம்,சமர்ப்பிக்கலாம்.
ஆணையம் அழைக்கும்போது விசாரணைகளுககும் இவர்கள் ஆஜராக வேண்டும். விசாரணைக்கு தேவையானஆவணங்கள், தகவல்கள் அளிப்போருக்கு விசாரணை ஆணையச் சட்டம்-1952 (6)வது பிரிவின்படி உரியபாதுகாப்பு அளிக்கப்படும்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications