பிள்ளையார் சிலை ஊர்வலங்களுக்கு கட்டுப்பாடுகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுககு பல்வேறு கட்டுப்பாடுகளை சென்னை மாநகரகாவல்துறை விதித்துள்ளது. இதை மீறினால் ஊர்வலங்களுக்கு அனுமதி ரத்தாகும் எனஎச்சரிக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி விழா வரும் 27ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டிசிவசேனா, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள்,அமைப்புகள் சார்பில் விநாயகர் ஊர்வலம் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இதறகிடையே, யார் யார் எந்தெந்த தேதியில், எந்த நேரத்தில் ஊர்வலங்களைநடத்தலாம் என்பது குறித்து சென்னை போலீஸார் சம்பந்தப்பட்ட அமைப்புகளுடன்பேசி முடிவு செய்யவுள்ளனர்.

சிலைகள் கரைப்பு மற்றும் ஊர்வலம் தொடர்பாக காவல்துறை விதித்துள்ளகட்டுப்பாடுகள்:

- மெரீனாவில் சிலைகளைக் கரைக்க அனுமதி கிடையாது.

- பிளாஸ்டர் ஆப் பாரீஸ் மற்றும் ரசாயானப் பூச்சு கொண்ட சிலைகளை கடலில்கரைக்க தடை விதிக்கப்படுகிறது.

-தென் சென்னையிலிருந்துவரும் களி மண் விநாயகர் சிலைகளை பட்டினப்பாக்கம்சீனிவாசபுரம் கடற்காரயில் தான் கரைக்க வேண்டும்.

- தென் சென்னை புறநகர் பகுதியிலிருந்து வரும் சிலைகள், நீலாங்கரை பல்கலை நகர்பகுதி கடலில் கரைக்க வேண்டும்.

-வட சென்னை சிலைகள் காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலும் ஒண்டிக்குப்பம்பாப்புலர் எடை மேடை அருகிலும், திருவொற்றியூர் யூனிவர்சல் கார்போரண்டம்நிறுவனத்தின் பின்புறத்திலும் கடலில் கரைக்கலாம்.

- வட சென்னை புறநகர் பகுதி சிலைகளை எண்ணூர் ராமகிருஷ்ணாநகர் கடல்பகுதியில் கரைக்க வேண்டும்.

- ஊர்வலத்தின்போது பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் எவ்வித இடையூறும்இன்றி, மத நல்லிணக்கத்தை பேணிப் பாதுகாக்கும் வகையில் போலீஸாருக்குஒத்துழைப்பு தந்து நடக்க வேண்டும்.

- ஊர்வலம் தொடங்க அனுமதிக்கப்பட்ட நேரத்தில், ஊர்வலத்தைத் தொடங்கவேண்டும்.

- ஊர்வலம் செல்ல அனுமதிக்கப்பட்ட பாதையில் மட்டும் தான் ஊர்வலம் செல்லவேண்டும்.

-சர்ச்சுகள், மசூதிகள் முன் எக்காரணம் கொண்டும் ஊர்வலத்தை நிறுத்தக்கூடாது.

- சிலையின் உயரத்திற்கும் வரம்பு உண்டு. அதைத் தாண்டி பெரிய சிலைகளைகொண்டு செல்லக்கூடாது.

- சாலையின் இடது ஓரத்தில்தான் ஊர்வலம் செல்ல வேண்டும்.

- விதிமுறைகளை மீறி ஊர்வலம் செல்லமுயன்றாலோ, அனுமதிக்கப்பட்ட பாதைமற்றும் நேரங்களை மீறி நடந்தாலோ, மத நல்லிணக்கத்திற்கு ஊறுவிளைவிக்கும்வகையில் சென்றாலோ சட்டப்படி மிகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

- ஊர்வலம் வன்முறையில்முடியும் எனத் தெரிய வந்தால் எந்த நேரத்திலும்ஊர்வலத்திற்கு அனுமதி ரத்து செய்யப்படும் என்பது உள்ளிட்ட 20 நிபந்தனைகளைகாவல்துறை விதித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+