கள்ளக்காதல்: ஆற்றில் மூழ்கடித்து கணவர் கொலை
திருச்சி:
கள்ளக் காதலை கண்டித்ததால் ஆற்றில் மூழ்கடித்து கணவரை கொலை செய்த பெண்உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி டோல்கேட் பிச்சாண்டார் கோயில் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளிபெரியசாமி (35). இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.இவர்கள் பீமா நகர் பகுதியில் குடியிருந்தபோது அங்கு பட்டறை நடத்தி வரும்ராஜாவுடன் லட்சுமிக்கு கள்ளத் தொடர்பு ஏற்பட்டது.
பெரியசாமிக்கு இது தெரிய வந்ததையடுத்து ராஜாவையும், லட்சுமியையும்கண்டித்தார். ஆனால் கள்ளத் தொடர்பை அவர்கள் நிறுத்தவில்லை. இதனால்பெரியசாமி, பிச்சாண்டார் கோயில் பகுதிக்கு வீட்டை மாற்றினார்.
இந் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் லட்சுமி திடீரென காணாமல் போனார்.விசாரித்தபோது கள்ளக் காதலால் கர்ப்பமடைந்த லட்சுமி, ராஜாவுடன் வேறு ஊரில்வசிப்பது தெரியவந்தது.
இதனால் ஆத்திரமடைந்த பெரியசாமி, ராஜாவை சந்தித்து மிரட்டினார்.
இந் நிலையில் கடந்த 4ம் தேதி சரவணன், ஆதியன் ஆகிய இருவரும் பெரியசாமிக்குமது வாங்கிக் கொடுத்தனர். போதையில் தள்ளாடிய பெரியசாமியை காவிரியில்குளிக்க அழைத்து சென்று திருச்சி, கரூர் சாலையில் கம்பரசம் பேட்டை காவிரிஆற்றில் தண்ணீரில் மூழ்கடித்து கொன்றனர்.
நேற்று காலை குடமுருட்டி பாலம் அருகேயுள்ள அய்யாளம்மன் படித்துறையில்பெரியசாமியின் உடல் கரை ஒதுங்கியது. பின்னர் போலீசார் அங்கு வந்துபெரியசாமியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்.
விசாரணையில் லட்சுமி தூண்டுதலின்பேரில் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.இதையடுத்து லட்சுமி, சரவணன், ஆதியன் ஆகிய மூன்று பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications