தேர்தல் ஆணையம் நோட்டீஸ்- அன்புமணியின் எம்பி பதவி தப்புமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

பெப்சி, கோக் விவகாரம் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்க மத்திய சுகாதாரஅமைச்சர் அன்புமணி வராததால், லோக் சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜிகோபமடைந்து கண்டனம் தெரிவித்தார்.

பூச்சி மருந்து அதிகளவில் உள்ளதால் பெப்சி,கோக் குளிர்பானங்களுக்கு நாடுமுழுவதும் தடைவிதிகக வேண்டும் என்று லோக்சபாவில் கோரிக்கைவிடுக்கபபட்டது.

இது தொடர்பாக பல்வேறு உறுப்பினர்களும் அரசின் நிலை குறிதது கேள்விஎழுப்பினர். இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி பதில் அளிப்பார் என்றுசோம்நாத் சாட்டர்ஜி அறிவித்தார்.

ஆனால், அப்போது அன்புமணி அவையில் இல்லை. இதையறிந்த சாட்டர்ஜிகோபமடைந்தார்.

மிக முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினை விவாதத்திற்கு வந்துள்ள நிலையில், அதறகுபதிலளிக்க வேண்டிய அமைச்சர் வராதது வருத்தம் தருகிறது. இது மிகவும் தவறானபோக்கு என்று கண்டிப்புடன் கூறினார்.

பின்னர் 2 மணிக்குத்தான் அன்புமணி சபைக்கு வந்தார். வந்தவுடன் சபாநாயகரிடம்மன்னிப்புகேட்டார்.

பின்னர் உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.

தேர்தல் ஆணையம் நோட்டீஸ்:

இதற்கிடையே மத்திய அமைச்சர் பதவியோடு, அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழகத் தலைவராகவும் உள்ள அன்புமணிக்கு ஆதாயம் தரும்இரட்டைப் பதவி தடை சட்டத்தின் கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஆதாயம் தரும் பதவியில் உள்ள அன்புமணியின் எம்பி பதவியை பறிக்கக் கோரி ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் மனுஅனுப்பினார். இந்த மனுவை தேர்தல் கமிஷனுக்கு கலாம் அனுப்பி வைத்தார்.

இதையடுத்து வரும் 28ம் தேதிக்கும் பதிலளிக்குமாறு அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+