பஹ்ரைன் தீ-விசாரணைக்கு இந்தியா கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
பஹ்ரைன் தலைநகர் மனாமாவில் நடந்த தீ விபத்தில் 16 தமிழர்கள் பலியானதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என அந்நாட்டு அரசுக்கு இந்தியாகோரிக்கை விடுத்துள்ளது.
மனாமாவில் கடந்த ஜூலை 30ம் தேதி இந்தியர்கள் தங்கியிருந்த கட்டடத்தில்ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 16 தமிழர்கள் பரிதாபமாக இறந்தனர்.இந்த விபத்து குறித்து ஆரம்பத்தில் விசாரணை நடத்தி வந்தது பஹ்ரைன் அரசு.ஆனால் தற்போது விசாரணை ஏதும் நடப்பதாகத் தெரியவில்லை.
இந் நிலையில், பஹ்ரைன் அரசுக்கு இந்தியா கோரிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில், குவாதிபயாவில் நடந்த தீ விபத்தில் 16 இந்தியர்கள் இறந்தது தொடர்பாகவிரிவான விசாரணை நடத்த வேண்டும். அங்கு சட்ட விரோதமாக தொழிலாளர்களைதங்க வைத்தது குறித்தும், இதில் நடந்த சட்ட மீறல்கள் குறித்தும் விரிவான விசாரணைநடத்த வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications