For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மோசடி பிஷப் மீது குவியும் புகார்கள்-நடிகையுடன்தொடர்பு-பெண் ஊழியருடன் குடித்தனம்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Bishop Anandaraj

நூற்றுக்கணக்கான காண்டிராக்டர்களிடம் கிட்டத்தட்ட ரூ. 100 கோடி வரை மோசடிசெய்திருப்பதாக சந்தேகிக்கப்படும் மோசடி பிஷப் ஆனந்தராஜ் மீது சகட்டுமேனிக்குபுகார்கள் குவிந்தவண்ணம் உள்ளன.

தனக்கு ஆண் வாரிசு வேண்டும் என்பதற்காக தனது நிறுவனத்தில் வேலை பார்த்தபெண்ணிடம் குடும்பம் நடத்தி ஆண் குழந்தையை ஆனந்தராஜ் பெற்றுள்ளார் என்றுபுதிய தகவல் வெளியாகியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் ஓதியூர்தான் ஆனந்தராஜுக்கு சொந்த ஊர. கடந்த 1980ம்ஆண்டு சென்னைக்கு இடம் பெயர்ந்தார். பெரம்பூரில் தங்கினார். கிறிஸ்தவ மதத்தில்சேர்ந்தார்.

அப்போதெல்லாம் ஆள் அரவமே இல்லாமல் இருந்து வந்த கிழக்குக் கடற்கரைச்சாலையோரம் உள்ள கிராமங்களுக்கு பெரம்பூரிலிருந்து சைக்கிளிலேயே சென்று மதப்பிரசாரம் செய்வார்.

ஆனந்தராஜ் மீது புகார் கொடுத்தவர்களில் சிலர்

வட நெமிலி கிராமத்திற்கு பிரசாரம் செய்ய வந்தபோது, அங்கு வந்த வெளிநாட்டுபயணிகளுடன் தொடர்பு ஏற்பட்டது. பிலிப்ஸ் என்றவெளிநாட்டுப் பயணியின்உதவியுடன் 1990ம் ஆண்டு நெமிலி கிராமத்தில் ஒரு வீட்டை வாங்கினார். இதுதான்அவரது முதல் சொத்து.

பின்னர் அந்த வீட்டில் மோலின் மிஷன் சர்ச் என்ற பெயரில் அநாதை ஆசிரமத்தைத்தொடங்கினார்.

இதையடுத்து வேகமாக வளரத் தொடங்கிய அவர் மாமல்லபுரம் அருகே பேரூர் என்றகிராமத்தில் தேவாலயம் ஒன்றைக் கட்டினார். இதுவரை ஒழுங்காக இருந்தவர் இதன்பின்னர் மோசடி வேலையில் இறங்கினார்.

சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்தவர்களிடம் சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக கூறிதலா 50,000 பணத்தை வாங்கி ஸ்வாஹா செய்துள்ளார்.

ஏமாந்தவர்கள் ஆனந்தராஜைத் தேடி வந்ததால் அங்கிருந்து தப்பி தலைமறைவானார்.

இந்த சமயத்தில்தான் அவருக்கு திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம்என்பவரோடு தொடர்பு ஏற்பட்டது. அவருடன் சேர்ந்த ரூரல் ரிசோர்ஸஸ் ரிசர்ச்டெலப்மென்ட் ஏஜென்சி என்ற அமைப்பைத் தொடங்கினார்.

ஏழைகளுக்கு வீடு கட்டித் தருவதாக திட்டத்தை அறிவித்தார். இதை வைத்து பலரைஏமாற்றினார். பிரச்சினை ஏற்படவே மீண்டும் சென்னைக்கு வந்தார்.

இங்கு வந்ததும் தனது வீடு கட்டித தரும் மோசடித் திட்டத்தை விரிவாக பண்ணத்தொடங்கினார். ஆறுமுகத்தை தலைவராகவும், வளர்ப்பு மகனான சுரேஷைசெயலாளராகவும், பழனி எனபவரை பொருளாளராகவும் நியமித்து தனது மோசடிவேலைகளை தொடர்ந்தார்.

வீடு கட்டித் தர காண்டிராக்டர்கள் தேவை என்று அவர் கொடுத்த விளம்பரத்தைப்பார்த்த ஏகப்பட்ட பேர் குவிந்தனர். அவர்களிடம் அட்வான்ஸ் என்ற பெயரில்லட்சக்கணக்கில் பணத்தைக் கறந்தார்.

இடையில் ஆறுமுகம் சைடில் பணம் சேர்க்க ஆரம்பிக்கவே அவரை விரட்டி விட்டுதானே தலைவரானார். தனது மனைவி, ஐந்து மகள்களை நிர்வாகக் குழுஉறுப்பினர்களாக ஆக்கினார்.

புதுவையில் பிஷப் அலுவலக்தைத் திறந்தார். பின்னர் ஆந்திர மாநிலம்காக்கிநாடாவிலும் ஒருஅலுவலகத்தைப் போட்டார். சமூக அந்தஸ்துக்காக தன்னைத்தானே பிஷப்பாக அறிவித்துக் கொண்டார்.

பல பாதிரியார்களை அழைத்து கீழப்பாக்கத்தில் ஒரு மாநாட்டை நடத்தினார். தனதுமோசடி வேலைகளுக்கு மதப் போர்வை போரர்த்திக் கொண்டார்.

அதன் பின்னர் சமூக சேவகராக தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டஅவர் முழுவீச்சில் மோசடி வேலைகளைத் தொடங்கினார். பெரும்பாலும் வீடு கட்டும் திட்டம்,வெளிநாட்டி"ல வேலை ஆகியவற்றிலேயே மோசடிகள் செய்தார்.

பேரூர் அருகே உள்ள பனையூரில் படு ஆடம்பரமான ஒரு பங்களாவைக் கட்டினார்.அங்கு நீச்சல் குளத்தையும் அமைத்தார்.பணத்தில் குளித்து வந்த ஆனந்தராஜ், பெங்களூரிலும் ஒரு வீட்டை வாங்கிப்போட்டார்.

காண்டிராக்டர்கள் பணத்தைத் திரும்பிக் கேட்டு வருவதைத் தவிர்க்க அவ்வப்போதுபெங்களூர் போய் தங்கிக் கொள்வார். சூடு குறைந்ததும் பேரூர் திரும்பி விடுவார்.

இவரது அலுவலகத்தில் நாகர்கோவிலைச் சேர்ந்த 2 பெண்களை வேலைக்குவைத்திருந்தார். அவர்களில் ஒருவருடன ஆனந்தராஜுக்கு நெருக்கம் ஏற்பட்டது.இதற்கு முக்கிய காரணம், தனக்கு ஐந்து மகள்கள் இருப்பதால், ஆண வாரிசுவேணடும் என்பதற்காக அவருடன் உறவு வைத்து ஆண் குழந்தையைபெற்றெடுத்துள்ளார்.

இது ஆனந்தராஜின் மனைவி டெய்ஸிக்குத் தெரிய வரவே பிரசசினையாகியுள்ளது.இருந்தாலும் அந்தப் பெண்ணுடன் தொடர்ந்து குடித்தனம் நடத்தி வந்துள்ளார்ஆனந்தராஜ்.

மோசடியில் சம்பாதித்த பணத்தை நடிகைகளிடம் தொடர்பு வைத்து இழந்துள்ளார்.

பிரபல நடிகர் ஒருவரையும், நடிகை ஒருவரையும் வைத்து சினிமா எடுக்க போவதாகக்கூறியுள்ளார்.

நீச்சல் குளத்துடன் கூடிய சொகுசு பங்களாவுக்கு அந்த நடிகையை வரவழைத்துஉல்லாசமாக இருந்துள்ளார். அந்த நடிகையிடமும் பல லட்சங்களை இழந்துள்ளார்.

கைதாகியுள்ள ஆனந்தராஜ் மீது மேலும் ரூ.1 கோடி மோசடி செய்ததாக சென்னைபோலீஸ் கமிஷ்னரிடம் நேற்று 2 பெண்கள் உள்பட 6 பேர் புகார் கொடுத்துள்ளனர்.

அருப்புக்கோட்டைய சேர்ந்த டிப்ளமோ என்ஜினீயர்கள் கருணாகரன், நாகர்கோவிலைசேர்ந்த ஜான்சி ஆபிரகாம், மதுரையை சேர்ந்த சாந்தி, திண்டுக்கல்லை சேர்ந்த விஜய்ஆனந்த் ஆகியோர் இந்த புகார் மனுக்களை கொடுத்தனர்.

இவர்களிடம் சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்றுள்ளார்.

மாமல்லபுரம் போலீசில் திருவண்ணாமலை, நாமக்கல், நெல்லை உள்பட பலமாவட்டங்களை சேர்ந்த காண்டிராக்டர்களும் ஆனந்தராஜ் மீது புகார் கொடுத்தவண்ணம் உள்ளனர்.

ஆனந்தராஜ் குறித்த ஏராளமான மர்மத் தகவல்கள் இன்னும் இருளில்தான் உள்ளன.அவரை தொடர்ந்து விசாரிப்பதன் மூலம் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள்வெளியாகும் எனத் தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X