தமிழகத்தில் சிக்குன் குனியா காய்ச்சல் தீவிரம்
சென்னை:
தமிழ்நாடு முழுவதும் சிக்குன் குனியா நோயால் ஆயிரக்கணக்கானவர்கள்பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நோய் தாக்கியவர்களுக்கு கை, கால்களில் மூட்டு வலி ஏற்படும். கிராமப்பகுதிகளில் தான் இந்த நோய் வேகமாக பரவி வருகிறது. சிக்குன் குனியாவுக்குஇதுவரை 50க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.இந்த நோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள சேலம் மாவட்டம். இங்கு மட்டும் 40க்கும்மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்த மாவட்டத்தில் சிக்குன் குனியா காய்ச்சல் 2மாதங்களுக்கு முன்பு பரவத் தொடங்கியது. இப்போதும் சேலம், ஓமலூர், ஆத்தூர்,தலைவாசல் ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் இந்த நோய்க்கு சிகிச்சைபெற்று வருகின்றனர்.
மேலும் நாமக்கல் மாவட்டத்திலும் சிக்கன் குனியாவால் பாதிக்கப்பட்டவர்கள்எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டும். நாமக்கல், சேந்தமங்கலம், திருச்செங்கோடு,புதுச்சத்திரம், பரமத்திவேலூர் ஆகிய பகுதியில் இந்த வைரஸ் காய்ச்சலால் பலர்பாதிக்கப்பட்டுள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் 5,000 பேரும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிக்குன் குனியாநோயால் மிக அதிகமாக 25,000 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர், கொமராயனூர், முரளி, ஜர்த்தல், கிட்டம்பட்டிசென்னம்பட்டி, குருவரெட்டியூர் உள்பட 15 கிராமங்களில் பலர் சிக்குன் குனியாநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன் ஈரோட்டை அடுத்த நசியனூரில் பள்ளி மாணவன்ஒருவன் சிக்குன் குனியாவால் பாதிக்கப்பட்டு கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டான்.
அதே போல கன்னியாகுமரி மாவட்டத்திலும் சிக்குன் குனியா நோயால் பலகிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குமரி மாவட்டத்தில் உள்ள 44 கடற்கரைகிராமங்களையும் இந்த நோய் கடுமையாக தாக்கியுள்ளது.
குறும்பனை, கன்னியாகுமரி, மணக்குடி, கடியப்பட்டணம், குளச்சல், தூத்தூர், நீரோடிஆகிய கிரமாங்களில் சிக்குன் குனியா நோய் பாதிப்பு உள்ளது.
நாகர்கோவில், திருச்சி மாவட்டம் துறையூர், துவரங்குறிச்சி, டால்மியாபுரம்,புள்ளம்பாடி, பெரிய குறுக்கை, அகரம் ஆகிய பகுதிகளிலும் விருதுநகர் மாவட்டம்ராஜபாளையம், அல்லம்பட்டி ஆகிய பகுதிகளில் சிக்குன் குனியா நோயால்நூற்றுக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கன்னவாடி, செம்பட்டி, நிலக்கோட்டை, தேனி மாவட்டம்கூடலூர், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, மதுரை மாவட்டத்தின் பல பகுதிகள்,கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகள், திருப்பூர்,பல்லடம் ஆகிய பகுதிகளிலும் இந்நோயால் பாதிக்கப்பட்ட பலர்மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.











Click it and Unblock the Notifications