ஓ.பி. தம்பியுடன் மோதி பதவி இழந்த வனச்சரகருக்கு மீண்டும் வேலை!

Subscribe to Oneindia Tamil

பெரியகுளம்:

Forest ranger Rajendran

கடந்த அதிமுக ஆட்சியில் மரக் கடத்தலில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பிமீதே நடவடிக்கை எடுத்ததால், பதவியில் இருந்து நீக்கப்பட்டு பந்தாடப்பட்டபெரியகுளம் வனச்சரகர் ராஜேந்திரனுக்கு மீண்டும் அதே பதவி வழங்கப்பட்டுள்ளது.

பெரியகுளம் வனச்சரகராக இருந்தபோது அதிமுக ஆட்சியில் பொதுப்பணித்துறைஅமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பி ராஜா தேக்கு மரங்களைக் கடத்தியதாகபரபரப்புகுற்றம்சாட்டினார் ராஜேந்திரன்.

இதையடுத்து ராஜேந்திரன் பந்தாடப்பட்டார். அவர் மீது ஊழல்குற்றச்சாட்டுக்களையும் வன் கொடுமை வழக்கையும் போட்டு சஸ்பெண்ட் செய்தார்முதல்வர் ஜெயலலிதா.

இதை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்து தனது பதவிநீக்கத்துக்கு தடை பெற்றார் ராஜேந்திரன். இதையடுத்து மறுபடியும் பணியில்சேர்ந்தார். இருப்பினும் அடுத்த சில நாட்களிலேயே அவருக்கு அவருக்கு கட்டாயஓய்வு கொடுத்தது தமிழக அரசு.

இதை எதிர்த்து ராஜேந்திரன் தொடர்ந்துளள வழக்கு நிலுவையில் உள்ளது.இந் நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதையடுத்து ராஜேந்திரனை மீண்டும்பணியில் சேர்த்து திமுக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து பெரியகுளம் வனச்சரகராக மீண்டும் பணியில் சேர்ந்துள்ளார்ராஜேந்திரன். மரக் கடத்தல் விவகாரத்தில் ஓ.பியின் தம்பி ராஜா மீது ராஜேந்திரன்பாய்வார் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+