அணை: தமிழக, கேரள எம்பிக்கள் மோதல்
டெல்லி:
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக மக்களவையில் தமிழக, கேரள எம்பிக்கள் இடையேமோதல் நடந்தது.
தமிழக-கேரள எல்லையான குமுளி-தேக்கடியில் உள்ளது முல்லைப் பெரியாறு அணை. இந்த அணை நீரால்மதுரை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் பயன் பெற்று வருகின்றன.இந்த அணையின் உயரத்தை அதிகரித்தால் தமிழகத்தின் விவசாயத் தேவைகளுக்கு அதிக நீரைத் தேக்கி வைக்கமுடியும். ஆனால், இதை கேரளம் ஏற்க மறுத்து வருகிறது. அணை பலவீனமானதாக உள்ள கதை சொல்லிவருகிறது.
இந்த அணையின் உயரத்தை அதிகரிக்கவும், அணையை பராமரிக்கும் பொறுப்பை தமிழகத்திடம்ஒப்படைக்கவும் உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது. ஆனால், அந்தத் தீர்ப்பை முறியடிக்க அணை பாதுகாப்புசட்டம் என்ற ஒன்றை கேரள சட்டமன்றம் நிறைவேற்றியது.
இதன் மூலம் அணையின் உயரத்தை அதிகரிப்பதற்கு கேரளம் தடை போட்டுள்ளது.
இந் நிலையில் இன்று மக்களவையில் கேள்வி நேரத்துக்குப் பின் இந்த விவகாரத்தை கேரள காங்கிரஸ்எம்பியான பிரான்சிஸ் ஜார்க் கிளப்பினார். அவர் பேசுகையில்,
தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாது என கேரளம் கூறவில்லை. ஆனால், முதலில் எங்களது தேவை தான் பூர்த்திசெய்யப்பட வேண்டும். இந்த விஷயத்தில் மத்திய அரசு உடனே தலையிட வேண்டும். இரு மாநிலங்களுக்கும்இடையே கூட்டத்தைக் கூட்டி பிரச்சனையை தீர்க்க வேண்டும்.
இப்போதுள்ள முல்லைப் பெரியாறு அணை (குமுளி-தேக்கடி அணை) பலவீனமானதாக உள்ளது. இதனால்புதிய அணையைக் கட்ட வேண்டும். இதில் மத்திய அரசு நடுவராக இருக்க வேண்டும் என்றார்.
இதை கேரள எம்பிக்கள் அனைவரும் ஆதரித்தனர்.
அப்போது பேசிய திமுக எம்பியான குப்புசாமி, 152 அடியாக இருந்த அணையின் உயரம் 136 அடியாககுறைக்கப்பட்டபோதே அணையை பலமாக்கும் பணிகளும் நடந்துவிட்டன. இப்போது அணை பலமாகவேஉள்ளது. இதனால் உயரத்தைக் கூட்டுவதில் எந்தத் தவறும் இல்லை.
உச்ச நீதிமன்றமே அணையின் உயரத்தை 142 அடியாக உயர்த்தலாம் என உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்தவிவகாரம் குறித்து சந்தித்துப் பேச இரு மாநில முதல்வர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
இந் நிலையில் இதை நாடாளுமன்றத்தில் பிரச்சனையாக்குவதே அவசியமற்றது என்றார்.
அவருக்கு தமிழக எம்பிக்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்தனர்.
இதையடுத்துப் பேசிய சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, இந்தப் பிரச்சனையை பேசித் தீர்க்க வேண்டும்.நண்பர்களுக்குள் இதை வைத்து மோதல் நடக்கக் கூடாது. தேச நலனை கருத்தில் கொண்டு இந்தப் பிரச்சனையைஅணுக வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications