குடும்பத்துக்குள் குழப்படி செய்யும் டைரக்டர்:அடுத்தவர் மனைவியை அபேஸ் செய்தார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அடுத்தவரின் மனைவியை அவரிடம் இருந்து பிரித்து கொண்டு சென்றுள்ளார் டைரக்டர். இதையடுத்து டைரக்டர்மீது போலீஸ் கமிஷ்னரிடம் அந்தப் பெண்ணின் கணவர் புகார் கொடுத்துள்ளார்.

Sagaya Ezhilkani

சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்த ஞானராஜ் போலீஸ் கமிஷ்னரிடம் ஒரு புகார் கொடுத்துள்ளார்.

அதில், நான் தூத்துக்குடியைச் சேர்ந்தவன். என் மனைவி சகாய எழில்கனி. அவர் எம்சிஏ படித்துள்ளார்.எங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. கடந்த 30ம் தேதி முதல் என் மனைவியைக்காணவில்லை.

இதையடுத்து அடையாறு காவல் நிலையத்தில் புகார் செய்தேன். இந் நிலையில் அடையாறு காவல் நிலையத்துக்குஎன் மனைவி வந்தார். அவருடன் செவ்வேல் படத்தை இயக்கிய டைரக்டர் பிரிமூஸ்தாஸ் மற்றும் பெர்னார்ட்ஆகியோரும் வந்தனர்.

அப்போது தான் எழில்கனியை இந்த இருவரும் சேர்ந்து கடத்தியது தெரிந்தது. மேலும் பிரிமூஸ்தாஸ் சொல்லிக்கொடுத்ததை என் மனைவி அப்படியே போலீசாரிடம் கூறியுள்ளார்.

நான் கணவரோடு வாழ மாட்டேன் என்று எழில்கனில் போலீசாரிடம் கூறியுள்ளார்.

ஆனால், நான் அவரோடு வாழத் தயாராக இருக்கிறேன் என போலீசாரிடம் கூறினேன்.

ஆனால், போலீஸ் நிலையத்தின் எதிரே வைத்து என்னை பிரிமூஸ்தாஸ் மிரட்டினார். இப்போதும் மிரட்டுகிறார்.

என் மனைவியை டைரக்டரிடம் இருந்து மீட்டுத் தர வேண்டும் என்று கூறியுள்ளார் ஞானராஜ்.

இது குறித்து அடையாறு போலீசாரிடம் விசாரித்தபோது, எழில்கனியை சென்னையில் வசிக்கும் அவரதுஅக்காளிடம் ஒப்படைத்துவிட்டோம் என்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+