தமிழக பள்ளி-கல்லூரிகளில் பெப்சி-கோக்குக்கு தடை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பெப்சி,கோக் குளிர் பானங்களுககு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களிலும் கோக், பெப்சிக்கு தடை விதிக்கதமிழக அரசும் பரிசீலனை செய்து வருகிறது.

பெப்சி, கோகோ கோலா உள்ளிட்ட 11 குளிர் பானங்களில் உடல்நலனுக்கு பாதிப்பைஏற்படுத்தும் அபாயகரமான ரசாயான பூச்சிக் கொல்லிகள் பாதுகாப்பு அளவைத்தாண்டி வுகலந்திருப்பாக ஆய்வு ஒன்றில் தெரியவந்து நாடுமுழுவதும் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து பெப்சி, கோக் உள்ளிட்ட குளிர்பானங்களுக்கு நாடு முழுவதும் தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த ஆய்வு முடிவு வெளியானஉடனேயே மத்திய பிரதேசம், கேரளா, டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப, குஜராத்,மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கல்வி நிறுவனங்களில் பெப்சி, கோக்உள்ளிட்டவற்றிற்கு தடை விதிக்கபபட்டுவிட்டது.

தமிழகத்திலும் இந்த குளிர்பானத்திற்குத்தடை விதிப்பது குறித்து அரசு பரிசீலித்துவருவதாகக் கூறப்படுகிறது.

இந் நிலையில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் தாங்களாகவே இந்தகுளிர்பானங்களுக்கு தடை விதித்துள்ளன.

அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே, முதல் முறையாகசர்ச்சை எழுந்தபோதே, தடை விதிக்கப்பட்டு விட்டது.

தற்போது சென்னையில் உள்ள பல்வேறு தனியார் கல்லூரிகள், நிகர்நிலைப்பல்கலைக்கழகங்கள், பள்ளிகள் ஆகியவற்றில் உள்ள கேன்டீன்களில் பெப்சி,கோக்குக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதில், பத்மா சேஷாத்ரி பள்ளி, திருவல்லிக்கேணி இந்து மேல்நிலைப்பள்ளி,கோபாலபுரம் டிஏவி பள்ளி உள்ளிட்ட பல்வேறு முன்னணி தனியார் பள்ளிகளும்அடங்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+