மாமூல் சண்டைகள்: நடுரோட்டில் கட்டி உருண்ட காக்கிகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மாமூல் பணத்தைப் பிரித்துக் கொள்வது தொடர்பாக ஏற்பட்ட சண்டையில், ஐந்துபோலீசார் நடு ரோட்டில் கட்டிப் புரண்டு சண்டை போட்டு சென்னை காவலதுறைக்குமேலும் ஒரு பெருமையை தேடிக் கொடுத்தனர்.

சில நாட்களுக்கு முன்பு சென்னை அருகே காவல் நிலையத்தில் மாமூல் பணத்தைபிரிப்பது தொடர்பாக இரண்டு தலைமைக் காவலர்கள் காவல் நிலையத்தில்கடுமையான சண்டை போட்டனர். இதை காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் அமர்ந்துவேடிக்கை பார்த்தார்.

இந்த விவகாரம் சட்டசபையிலும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இருபோலீசாரும் அந்த எஸ்ஐயும் சஸ்பெண்ட் ஆகியுள்ளனர்.

இந் நிலையில் மீண்டும் ஒரு மாமூல் சண்டை நடந்துள்ளது. இந்த சண்டைநடுரோட்டில் நடந்ததால் காவல்துறையின் பெயர் நாறிப்போய் உள்ளது.

ஆதம்பாக்கம் சஞ்சய் காந்தி நகரைச் சேர்ந்தவர் தர்மலிங்கம். இவர் தொலைபேசித்துறையில் பணியாற்றி வருகிறார். ஃபிளாட்டில் வசிக்கும் இவர், நேற்று தனது வீட்டில்ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

போர் போடும் லாரி சாலையின் குறுக்கே நிறுத்தப்பட்டிருந்தது. அபபோது ஆதம்பாக்கம் காவல நிலைய காவலர் ஜோசப் அங்கு வந்துளார். இப்படிமக்களுக்கு இடையூறாக லாரியை நிறுத்துவதா (ரொம்ப அக்கறை) என்று கேட்டுதர்மலிங்கத்தை மிரட்டி 1000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

ஆனால் தர்மலிங்கம் 500 ரூபாய் தருவதாகக் கூறினார். அப்போது ஜெயராஜ் என்றஇன்னொரு காவலர் வந்துள்ளார்.

டேய் இது என் ஏரியா. இங்கு வந்து எப்படி நீ பணம் வாங்கலாம் என்று கேட்டுஜோசப்புடன் வாக்குவாதம் செய்தார். சரி உன்னோட பங்கை நீ கேட்டு வாங்கிக்கோஎன்று இ.பி.கோவில் இல்லாத ரூல் ஒன்றை எடுத்துக் கூறியுள்ளார் நியாயவாதியானஜோசப்.

இதையடுத்து அவருக்கும் 500 ரூபாய் லஞ்சம் அழுதார் தர்மலிங்கம்.தர்மலிங்கம் என்று ஒரு அப்பாவி, இப்படி அள்ளி அள்ளிக் கொடுப்பதை அறிந்தஇன்னொரு காவலரும் உடனே அங்கு விரைந்து வந்தார்.

எனக்கும் பணம் கொடுங்க என்று கேட்க அவருககும் 200 ரூபாயை அழுதுதொலைத்தார் தர்மலிங்கம்.

பணத்தை வாங்கிக் கொண்டு 3 போலீஸாரு ம்காவல் நிலையத்தில் சந்தித்தனர்.அப்போது மாமூல் தொடர்பாக கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது சண்டையாகமாறியது.

காவல் நிலையத்தில் வைத்து கெட்ட வார்த்தைகளை உமிழ்ந்தபடி இந்த நாறிப்போனகாக்கிகள் சண்டை போட்டனர். அடித்து உருண்டனர்.

அப்படியே சண்டை போட்டபடி ரோட்டுக்கு வந்தனர். வெளியிலும் வந்து அடித்துஉதைத்துக் கொணடனர். காவலர்கள் கட்டிப்புரண்டு சண்டை போட்டதால்அப்பகுதியே மிரண்டு போனது.

சக போலீஸார் கஷ்டபபட்டு 3 பேரையும் விலக்கி விட்டனர்.

இன்னொரு சண்டை:

இதேபோல குயில் குப்பம் என்ற இடத்திலும் போலீஸார் நடு ரோட்டில் சண்டைபோட்டு நாறியுள்ளனர்.

குயில் குப்பத்தைச் சேர்ந்தவர் சரணவன். தனது கடையில ரவுடி ஒருவர் மிரட்டுவதாகபோலீஸாருக்குப் போன் செய்தார். இதையடுத்து பிரேம்குமார் என்ற காவலர்விசாரிப்பதற்கு வந்தார்.

அப்போது விஜயக்குமார் என்ற இன்னொரு போலீஸ்காரரும் அங்கு வந்தார்.

இருவரும் சரவணனிடம் நடந்ததை விசாரிப்பதற்குப் பதில் ஆளுக்கு ஆள் லஞ்சம்கேட்டு அனத்த ஆரம்பித்தனர். (இதுக்கு அந்த ரவுடிக்கே மாமூல் கொடுத்திருக்கலாம்) அப்போதுஇரு போலீஸ்காரர்களுக்கும் இடையே யாருக்கு அதிக பங்கு என்பதில் பிரச்சினைஏற்பட்டது.

இதையடுத்து இருவரும் சாலையிலேயே கட்டிப் புரண்டு சண்டை போட்டனர்.

இந்த இரு சம்பவங்களும் சென்னை காவல்துறையில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.

இப்போதெல்லாம் மாமூல் சண்டைகள் ரொம்ப மாமூலாகிவிட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+