சுதாகரன் திருமணம்: அதிமுக-திமுக மோதல்
சென்னை:
மாஜி முதல்வர் ஜெயலலிதாவின் மாஜி வளர்ப்பு மகன் சுதாகரனின் பிரமாண்ட திருமணம் குறித்துசட்டசபையில் பேசப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அதிமுக மற்றும் மதிமுகஎம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
சட்டசபையில் இன்று நிதி, சிறைத்துறை, மற்றும் வருவாய்த்துறை ஆகியவற்றின்மீதான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது. அதன் விவரம்:ஜெயக்குமார் (அதிமுக): கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் தான் தமிழகம் அமைதிபூங்காவாக காணப்பட்டது. பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை. அது போல்அம்மாவின் ஆட்சிக்கும் விளக்கம் தேவையில்லை. தீவிரவாதிகள் தொலைந்துபோனது அம்மா ஆட்சியில் தான். ஜாதிச் சண்டைகள் ஒடுக்கப்பட்டதும் அம்மாஆட்சியில் தான். ரூ.100 கோடி செலவில் புதிய நீதிமன்ற கட்டிடங்கள்கட்டப்பட்டதும் அம்மா ஆட்சியில் தான்.
அமைச்சர் பெரியசாமி: ரூ.100 கோடிக்கு நீதிமன்ற கட்டிடங்கள் கட்டியதாக கூறுகிறார்.எந்தெந்த நீதிமன்றங்கள் என்று விவரமாக கூற முடியுமா?
ஜெக்குமார்: ரூ. 65 கோடி செலவில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை.பெரியசாமி: மதுரை உயர்நீதிமன்றக் கிளை கடந்த கலைஞர் ஆட்சியில் ரூ. 56.45கோடி செலவில் கட்ட திட்டமிடப்பட்டு நிதியும் ஒதுக்கப்பட்டது. அடிக்கல் நாட்டுவிழாவும் திமுக ஆட்சியில் தான் நடந்தது.
ஜெயக்குமார்: அமைச்சர் தவறான தகவலை தருகிறார்.
பெரியசாமி: ரூ. 56.45 கோடியில் உயர்நீதி மன்ற மதுரை கிளை திமுக ஆட்சியில்தான் கட்ட தொடங்கப்பட்டது.
ஆற்காடு வீராசாமி: மதுரை உயர்நீதிமன்ற கட்டிடம், சென்னையில் ரூ.104 கோடியில்அரசு மருத்துவமனை கட்டிடம் எல்லாமே திமுக ஆட்சியில் தான் அடிக்கல்நாட்டப்பட்டது. இதை சொல்வதற்கு காரணம் ஒரு ஆட்சியில் கட்டிடங்களை கட்டதொடங்கினாலும் அது அடுத்த ஆட்சியில் முடிக்கப்படுகிறது.
ஓ.பன்னீர்செல்வம்: சிக்கன நடவடிக்கையாக நாங்கள் குறைந்த செலவில் நிறைவாககட்டி இருக்கிறோம். இதை தலைமை நீதிபதியே பாராட்டி உள்ளார்.
பெரியசாமி: சிக்கன நடவடிக்கையை கடைபிடித்ததாக கூறினார். எதிர்கட்சிதலைவரின் முன்னாள் வளர்ப்பு மகன் திருமணத்துக்கு ரூ.100 கோடிசெலவழிக்கப்பட்டதே, அது சிக்கனமா?
(இதற்கு அதிமுக உறுப்பினர்கள் எல்லோரும் எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர்)
ஓ.பன்னீர்செல்வம்: இந்த அவைக்கு சம்பந்தமில்லாத, மானிய கோரிக்கைக்குதொடர்பு இருந்ததை அமைச்சர் பேசி இருக்கிறார். இது சபை விதிக்கு உகந்ததா?அவர் பேசிய வார்த்தையை சபை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்.
பெரியசாமி: அதிமுக ஆட்சி காலத்தில் சபைக்கு வெளியில் உள்ள எவ்வளவோவிஷயங்கள் இங்கு பேசப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. நீங்கள் சொன்ன அதேசிக்கனம் பற்றித்தானே நாங்களும் பேசினோம். (இதனால் அதிமுக, திமுக இடையேகடும் வாக்குவாதம் ஏற்பட்டது)
ஜெயக்குமார்: தனது குடும்பத்தில் நடந்த திருமணங்களுக்கான கணக்கை முதல்வர் கருணாநிதி விளக்குவாரா?
பெரியசாமி: செலவிட்ட ஒவ்வொரு பைசாவுக்கும் இதே அவையிலேயே கணக்கை சமர்பிக்க முதல்வர் தயார்.
(மாஜி சுதாகரன் குறித்து பேசப்பட்டதை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்என அதிமுகவினர் கோஷம் போட்டனர்.)
சபாநாயகர்: சபை குறிப்பில் இருந்து எதை நீக்க வேண்டும், எதை நீக்க கூடாதுஎன்பது எனது உரிமை.
அமைச்சர் பரிதி இளம்வழுதி: இன்று நீதி நிர்வாக மானியக் கோரிக்கை மீது விவாதம்நடக்கிறது. ரூ. 100 கோடி செலவு செய்து கல்யாணம் செய்து வைத்த வளர்ப்பு மகன்மீது கஞ்சா வழக்கு போட்டார்கள். அந்த வழக்கு எந்த நிலையில் இருக்கிறது என்பதைஎதிர்க் கட்சித் தலைவர் ஜெயலலிதா சொல்வாரா?
கண்ணப்பன் (மதிமுக): அவைக்கு சம்பந்தம் இல்லாததை பேசியதால் தா சர்ச்சைஎழுந்துள்ளது. எனவே அமைச்சர் சொன்னதை அவைக் குறிப்பில் இருந்து நீக்கவேண்டும்.
அமைச்சர் வீராசாமி: அதற்கான அவசியம் இல்லை.
இதை தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
அமைச்சர் பொன்முடி: இந்த அவையில் பிற கட்சித் தலைவர்களை அதிமுகஆட்சியில் எப்படிப் பேசினார்கள் என்பது அவைக் குறிப்பில் இருக்கிறது.அதையெல்லாம் கண்ணப்பன் எடுத்து படித்துப் பார்க்க வேண்டும். தகர டப்பா, கிழ்ந்தசட்டை, மரம் வெட்டிகள் என்றெல்லாம் பேசினார்கள். ஏன் உங்கள் தலைவரை(வைகோ) எப்படியெல்லாம் பேசினார்கள் தெரியுமா?
பரிதி: ஜெயலலிதாவின் பாசிச கொடுங்கோல் ஆட்சியை அகற்றியே தீருவேன்என்றாரே உங்கள் தலைவர். அது குறித்து என்ன சொல்கிறீர்கள்?
கண்னப்பன்: அதைப் பற்றி இங்கு விவாதிக்கவில்லை. சொல்ல வேண்டிய நேரத்தில்சொல்வோம். அதைப் பற்றி பரிதி கவலைப்படத் தேவையில்லை.
இவ்வாறு கூறிவிட்டு மதிமுகவினரும் வெளிநடப்பு செய்தனர்.












Click it and Unblock the Notifications