குடிமகன்களுக்கு கொண்டாட்டம்.. குறையப் போகுது பீர் விலை
சென்னை:
பீர் மீதான வரியைக் குறைத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் 20 சதவீதம் வரை பீர் விலைகுறையுமாம்.
இந்தியாவில் பீர் மீது 42 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இதை மற்ற நாடுகளில் இருப்பதை போல் 20 சதவீதமாகக்குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் சில்லரை விற்பனைக் கடைகளுக்கு நீண்ட கால அடிப்படையில்லைசென்ஸ் கட்டணங்களை குறைக்கவும் திட்டமிட்டுள்ளது.நாடு முழுவதும் பீரின் விலையை ஒரே மாதிரியாக நிர்ணயிக்கவும் அரசு யோசித்து வருகிறது. இந்தயோசனைகள் அமலாக்கப்பட்டால் இந்திய பீர் வர்த்தகம் மேலும் அதிகரிக்கும்.
அது மட்டுமல்லாது ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு மதுபானங்களைக் கொண்டு செல்லும்போது விதிக்கப்படும் நுழைவு வரியும் ரத்து செய்யப்படவுள்ளது.
பிற நாடுகளோடு ஒப்பிடுகையில் இந்தியாவில் பீரின் விலை 3 மடங்கு அதிகமாக உள்ளது.
இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 13.20 கோடி பீர் பாட்டில்கள் விற்பனையாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் விற்பனையாகும் மொத்த மதுபானங்களில் 4 சதவீதம் தான் பீர் விற்பனையாகிறது. மற்றதெல்லாம்ஹாட் தான்.
ஆனால் மற்ற நாடுகளில் மொத்த மதுபான விற்பனையில் பீர் விற்பனை 60 சதவீதமாக உள்ளது.
வரியைக் குறைத்து குடிமகன்களுக்கு உதவும் மத்திய அரசு, அப்படியே பெட்ரோல் மீதான வரியையும், கல்விக்கட்டணத்தையும் குறைத்தால் நாட்டுக்கு நல்லது.












Click it and Unblock the Notifications