மேல்மருவத்தூரில் ரயிலை மறித்த பயணிகள்

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்:

விழுப்புரம்-தாம்பரம் இடையிலான பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து மேல்மருத்வத்தூரில்பொது மக்கள் இன்று பாண்டிச்சேரி-சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலை வழிமறித்து போராட்டம் நடத்தினர்.

இரு நாட்களுக்கு முன் இந்த ரயில் ரத்து செய்யப்பட்டது. இதனால் கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு, மதுராந்தகம்,மேல்மருவத்தூர் செல்லும் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை மேல்மருவத்தூரில் திடீரென போராட்டத்தில் குதித்த பொது மக்கள் பாண்டிச்சேரி-தாம்பரம் ரயிலைவழிமறித்து தண்டவளாத்தில் படுத்தனர்.

இதையடுத்து டிஎஸ்பி அப்துல் அஜீஸ் தலைமையிலான போலீஸ் படை அங்கு சென்று சமாதானப்பேச்சுவார்த்தை நடத்தியது. விழுப்புரம்-தாம்பரம் ரயில் ரத்து செய்யப்பட்டதால் இந்த வழியே செல்லும்அனைத்து ரயில்களும் மேல்மருவத்தூரில் நின்று செல்ல வழி செய்ய வேண்டும் என போராட்டம் நடத்தியவர்கள்கோரினர்.

அவர்களது கோரிக்கைகளை எழுதி வாங்கிய போலீசார், அதை ரயில்வே அதிகாரிகளுக்குத்தெரியப்படுத்துவதாகக் கூறி அவர்களை கலைந்து போகச் செய்தனர். இதையடுத்து அந்த ரயில் 30 நிமிடத்துக்குப்பின் கிளம்பிச் சென்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+