சென்னையில் ரூ.520 கோடியில் புதிய டயர் ஆலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் ரூ. 520 கோடி முதலீட்டில் அப்பல்லோ டயர்ஸ் தொழிற்சாலை அமையவுள்ளது.
ஓரகடம் சிப்காட் தொழிற் பூங்காவில் இந்த ஆலை அமையும். பஸ், கார், டிரக்குகளுக்கான ரேடியல் டயர்கள்இங்கு தயாரிக்கப்படும். இந்தத் தொழிற்சாலை அமைவதால் சுமார் 2,000 பேருக்கு வேலை வாய்ப்புகள்உருவாகவுள்ளது.முதல்வர் கருணாநிதி முன்னிலையில் இந்த ஆலை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் தமிழக அரசின்தொழிற்துறைச் செயலாளர் சக்திகாந்த தாஸ் மற்றும் அப்பல்லோ டயர்ஸ் நிறுவன தலைவர் ஓங்கார் கன்வரும்கையெழுத்திட்டனர்.
உலகின் 15வது மிகப் பெரிய டயர் நிறுவனம் அப்பல்லோ டயர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில்தென்னாப்பிரிக்காவில் இரு டன்லப் டயர் தொழிற்சாலைகளையும், ஜிம்பாம்வே நாட்டில் இரு டயர்நிறுவனங்களையும் அப்பல்லோ டயர்ஸ் வாங்கியது.
ஆட்டோமொபைல் நிறுவனங்கள் விரும்பி முதலீடு செய்யும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications