கரோலினை கட்டாயப்படுத்தி மணந்தார் கோவி.கண்ணன்-அண்ணன் வாக்குமூலம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை போலீஸ் ஏட்டு தங்கராஜின் 16 வயது மகள் கரோலினை கட்டாயப்படுத்தித்தான் என் தம்பி கல்யாண் செய்தார் என பைனான்சியர் கோவி.கண்ணனின் அண்ணன்கூறியுள்ளார்.

Caroline

ராயபுரத்தைச் சேர்ந்த கரோலினை கோவிகண்ணன் கடத்திச் செனறு கட்டாயத்திருமணம் செய்து கற்பழித்தாக புகார் கூறப்பட்டுள்ளது.

இந்தக் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த 4 போலீஸார் சஸ்பெண்டசெய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாகிவிட்ட கோவிகண்ணன் முன் ஜாமீன் கோரிமனு தாக்கல் செய்துள்ளார்.

கோவிகண்ணனின் லீலைகள் குறித்து கரோலின் போலீஸில் பரபரப்பு வாக்குமூலம்கொடுத்துள்ளார்.

கண்ணனுக்கு 26 பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும், மதுரை அருகேஆண்டிப்பட்டி பகுதியில் அவர்களை கண்ணன் வைத்திருப்பதாகவும அவர்போலீஸில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து ஆண்டிப்பட்டி அருகே உள்ள கண்ணனின் சொந்த ஊரான ஜம்புலிபுதூர்,மதுரை தோப்பூர் உளளிட்ட இடங்களில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர்.

Caroline

கண்ணனின் நண்பர்கள், உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். கரோலினுடன்,கோவி. கண்ணன் தங்கியிருந்த தோப்பூர் வீட்டையும் சோதனையிட்டு விசாரணைநடத்தினர்.

ஜம்புலிபுதூரில் கரோலினை அடைத்து வைத்து 14 நாட்கள் கற்பழித்ததாகக்கூறப்படும் வீட்டையும் போலீஸார் சோதனையிட்டனர்.

அருகில் உள்ள வீடுகளைச் சேர்ந்த பெண்களிடமும் விசாரணை நடத்தினர்.

அதற்கு அவர்கள், அடிக்கடி கரோலின் சத்தம் போட்டு அழுவார் என்றும் கேடடால்,புதுப்பெண், விவரம் புரியாமல் கத்துகிறாள் என்று கண்ணன் கூறிவிடுவார். கரோலின்கழுத்தில் தாலி இருந்ததால் நாங்கள் எதுவும் கேட்கவிலலை என்றனர்.

இந் நிலையில், கண்ணனின் அண்ணன் குணசேகர் சிலமுக்கியத் தகவல்களைபோலீஸாரிடம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,

கோவி கண்ணன் மட்டுமே கல்யாணம் செய்யாமல் தனியாக இருந்து வந்தார்.கேட்கும்போதெல்லாம் தட்டிக் கழித்து வந்தார். எப்போதாவதுதான் எங்களது ஊருககுவருவார்.

Caroline with Gopikannan

கடந்த மாதம் அதேபோல வந்திருந்தார். தன்னுடன் இளம் பெண் ஒருவரையும்அழைத்து வந்திருந்தார்.கேட்டதற்கு, இந்தப் பெண்ணைத்தான் நான் திருமணம் செய்துகொண்டுள்ளேன். மோதிரம் மாற்றி திருமணம் செய்துள்ளோம்.

தாலி கட்டி கல்யாணம் செய்வதற்காகத்தான இங்கே கூட்டி வந்துள்ளேன் என்றார்.

இதற்கு நாம் ஏன் தடை சொல்ல வேண்டும் என்று நினைத்து நாங்களும் திருமணஏற்பாட்டை செய்தோம். எங்களது தோப்பூர் வீட்டில் வைத்துததான் கரோலின்கழுத்தில் தாலி கட்டி கல்யாணம செய்தான் கண்ணன்.

அப்போது கரோலின் கதறி அழுதார். இதைப் பார்த்த நாங்கள், பெற்றோரை பிரிந்ததுயரத்தில் அழுகிறார் போல என நினைத்தோம்.

ஆனால் பின்னர் எனது மனைவியிடம், எனக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டம் இல்லைஎன்றுகூறி அழுதுள்ளார் கரோலின்.

அதற்கு எனது மனைவி, முதலிலேயே சொல்லியிருந்தால், கண்ணனிடம் பேசி உனதுபெற்றோரிடம் அனுப்பி வைத்திருப்போம். அவர் கோபக்காரர். எப்படியாவதுஅனுசரித்து குடும்பம் நடத்து என கூறியுள்ளார்.

இதன் பிறகுதான் கரோலினை அவன் கட்டாயக் கல்யாணம் செய்திருக்கிறான் எனத்தெரிய வந்தது. அதன் பிறகு எனது தம்பியை நாங்கள் சத்தம் போட்டோம்.

இதனால் ஜம்புலிபுதூருக்கு போய் விடடான்.இந்தக் கல்யாணத்திற்கும், எங்களது குடும்பத்தாருக்கும் தொடர்பு இல்லை என காவல்நிலையத்தில் வைத்து கண்ணன் எழுதிக் கொடுத்து விட்டார்.

எனவே எனது தம்பியின் செய்கைக்கும், எங்களுக்கும்தொடர்பு இல்லை என்றார்குணசேகர்.

கரோலினை சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை காட்டி அவரை நிர்வாணமாகபடம் எடுத்து அதை வைத்து மிரட்டியும் போலீசார் உதவியோடு கடத்தி, தாலி கட்டிகற்பழித்துள்ளார் கோவிகண்ணன்.

கரோலின் ஒரு மைனர் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+