காளிமுத்துவின் ஊழல்: கருணாநிதி சவால்!
சென்னை:
சட்டசபை விடுதி உணவகத்திற்கு காண்டிராக்ட் விட்டதில்முன்னாள் சபாநாயகர்காளிமுத்து ஊழல் செய்திருப்பதாக நான் கூறுவதற்கு போதுமானஆதாரம் உள்ளதுஎன்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். இதுதொடர்பான கோப்புகளையும்சபாநாயகர்ஆவுடையப்பனிடம் அவர் ஒப்படைத்தார்.
தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் பாமக தலைவர் ஜி.கே.மணிஎழுந்து, எம்.எல்.ஏ. விடுதியில் உள்ள உணவு விடுதிகளுக்கு ஒப்பந்தக்காரர்கள்கோரியதை விட குறைவான தொகைக்கு முன்னாள் சபாநாயகர் காளிமுத்து அனுமதிஅளித்திருப்பதாக கடந்த மாதம் 3ம் தேதி முதல்வர் தெரிவித்தார்.இதற்குப் பதிலளித்த காளிமுத்து, கோப்புகளை முதலமைச்சர் திருத்தியிருக்கலாம்என்ற குற்றச்சாட்டை கூறியிருக்கிறார். இதில் நாட்டு மக்களுக்கு உண்மையைதெரியப்படுத்த வேண்டும் என்றார்.
அதற்கு கருணாநிதி பதிலளிக்கையில், எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோதுஅப்போதைய அமைச்சர் குழந்தைவேலு இதேபோல ஒரு குற்றச்சாட்டை வைத்தார்.
பெரியகுளம் இடைத் தேர்தலின்போது கம்பம் நடராஜனுக்குச் சொந்தமானதோட்டத்தை நான் விலைக்கு வாங்கி அங்கு என் துணைவியோடுதங்கியிருந்ததாகவும், பின்னர் அதனை அழகிரிக்கு எழுதி வைத்து விட்டதாகவும்குழந்தைவேலு தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்த நான் அது உண்மைக்கு மாறான தகவல். அதனை நிரூபிக்கமுடியுமா என்று கேட்டேன். அதற்குப்பதில் அளித்த குழந்தைவேலு, நிரூபிக்கிறேன்.இல்லாவிட்டால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்றார்.
நானும் குழந்தைவேலு சொல்வதை நிரூபித்து விட்டால் நான் அரசியலில் இருந்தேதுறவறம் செல்கிறேன் என்றேன்.
இது எம்.ஜி.ஆர். முன்னிலையில் இதே அவையில் நடந்த விவாதம். அன்றையசபாநாயகர் ராஜாராம், இதுகுறித்து விசாரித்து, கருணாநிதியின் மீதான குற்றச்சாட்டுசரியில்லை என்று தீர்ப்பு கூறினார். நானும், உண்மை தெரிந்தால் போதும்,குழந்தைவேலு ராஜினாமா செய்யத் தேவையில்லை என்றேன்.
இப்போது காளிமுத்து கையெழுத்து அடங்கிய கோப்புகள் என்னிடம் உள்ளன.இவற்றில் ஒரு கோப்பில் உணவு விடுதியின் ஆண்டு வாடகையாக ரூ. 2,60,000தருவதாகக் கூறி அதனை தொடர்ந்து நடத்த அனுமதி தருமாறு அதன் உரிமையாளர்மணி கேட்டிருக்கிறார்.
ஆனால் மாதம் ரூ. 2,753 தந்தால் போதும் என்று காளிமுத்து கைப்படஎழுதியிருக்கிறார். அந்த வகையில் ஆண்டு வாடகையாக ரூ.33,000 போதும் என்றுகாளிமுத்து கையெழுத்துப் போட்டிருக்கிறார்.
இதேபோல இன்னொரு கடைக்கு வாடகையாக ரூ.11,80,00 தருவதாக ஒப்பந்தக்காரர்கேட்டிருக்கிறார். ஆனால் மாதம் ரூ. 5,000 வாடகை தந்தால் போதும் என்றுகாளிமுத்து உத்தரவிட்டிருக்கிறார். இதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 11,20,000 வீதம்நான்கு ஆண்டுகளுக்கு ரூ. 44,80,00 அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
பொது நலன் கருதியே இதைத் தெரிவித்தேன். அந்த இரண்டு கோப்புகளையும்சபாநாயகரிடம் ஒப்படைக்கிறேன் என்று கூறி இரண்டு கோப்புகளையும்ஆவுடையப்பனிடம் கொடுத்தார்.
இவற்றை அனைத்துக் கட்சி தலைவர்களையும் அழைத்துக் காட்டி நான் கூறுவதுஉண்மையா, இல்லையா என்பதை சபாநாயகர்அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் கருணாநிதி.
பின்னர் பேசிய ஆவுடையப்பன், முதலமைச்சர் என்னிடம் ஆவணங்களைஒபபடைத்துள்ளார். எதிர்க் கட்சித் தலைவர்கள் என்னுடைய அறைக்கு வந்துஉண்மையைத் தெரிந்து கொள்ளலாம் என்றார்.












Click it and Unblock the Notifications