சென்னை பேராசிரியைக்கு கல்பான சாவ்லா விருது
சென்னை:
பிரபல கணித பேராசிரியையும், ஐஐடியில் 17 ஆண்டுகள் பணியாற்றியவருமானடாக்டர் வசந்தா கந்தசாமிக்கு இந்த ஆண்டுக்கான கல்பான சாவ்லா விருதுவழங்கப்படவுள்ளது.
கல்வி, சமூகத்துறையில் சிறந்து விளங்கும் பெண்களுக்கு கல்பனா சாவ்லா விருதைதமிழக அரசு வழங்கி வருகிறது.இந்த ஆண்டுக்குரிய விருதுக்கு டாக்டர் வசந்தா கந்தசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
டாக்டர் வசந்தா கந்தசாமி, கணித துறையில் சிறந்த ஆய்வாளர். ஐஐடியில் 17ஆண்டுகள் பணியாற்றியுளளார். கணிதத்தில் பல மாணவர்கள், டாக்டர் பட்டம் பெறவழிகாட்டியாக இருந்துள்ளார்.
கணிதத்துறையில் இவர் படைத்துள்ள 14 நூல்களில் பெரும்பாலானவைஅமெரிக்காவில் வெளியிடப்பட்டுள்ளன.
ஐஐடியில் பணியாற்றும் 480 ஆசிரியர்களில் இவர் ஒருவர் மட்டுமே, சமூக நீதிஅடிப்படையில் (இட ஒதுக்கீடு) ஆசிரியர்கள நியமிக்கப்படவேண்டும் என்பதைவலியுறுத்தி, நிர்வாகத்துடன் போராடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
வசந்தா கந்தசாமியின் கணித அறிவாற்றலையும், சமூக நீதியை நிலை நாட்ட தீரமுடன்போராடிய மன உறுதியையும் பாராட்டி கல்பான சாவ்லா விருது வழங்கப்படுகிறது.
ரூ. 5 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் பதக்கம் ஒனறையும் கொண்டது இந்த விருது.
சுதந்திர தினத்தன்று இந்த விருது வழங்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications