பஹ்ரைன்: 150 தமிழர்களின் வேலை பறிப்பு
துபாய்:
பஹ்ரைன் தீ விபத்தில் 16 தமிழர்கள் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து ராயல் டவர்கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த 150 தமிழகத்தொழிலாளர்களையும் வேலையிலிருந்து அந்த நிறுவனம் நீக்கிவிட்டது. இதனால்சம்பளமும் இல்லாமல், சாப்பாட்டுக்கும் வழியில்லாமல் 150 பேரும் பரிதவித்துவருகின்றனர்.
பஹ்ரைன் தலைநகர் மனாமாவில் உள்ள ராயல் டவர் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்தில்கட்டுமானப் பணியில் 300க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வேலை பார்த்து வந்தனர்.கடந்த மாதம் இவர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 தமிழகதொழிலாளர்கள் இறந்தனர்.இந் நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த மற்ற 150 தொழிலாளர்களையும்வேலையிலிருந்து அந்த நிறுவனம் நீக்கியுள்ளது. இதனால் அவர்கள் அனைவரும்வேலையை இழந்து, சம்பளம் இல்லாமல் சாப்பாட்டுக்குக்கூட வழியில்லாமல்சிரமத்திற்கு ஆளாகியுளனர்.
இந் நிறுவனத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்களை ராயர் டவர் நிறுவனம்பல்வேறு வகைகளில் கொடுமைப்படுத்தி வருவதாக வந்த தகவலைத் தொடர்ந்துஅந்த நிறுவனத்திடம் பஹ்ரைன் நாட்டு தொழிலாளர் நலத்துறை விசாரணை நடத்திவருகிறது.
இந் நிலையில் தான் தமிழகத் தொழிலாளர்களை ஒட்டுமொத்தமாக வேலையிலிருந்துநீக்கியுள்ளது ராயல் டவர் நிறுவனம்.
வேலையிலிருந்து நீக்கப்பட்ட 150 பேரும் தாற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களை வேறு வேலையில் சேர வேண்டாம், அப்படிச்சேர்ந்தால் அது சட்டவிரோதம் என்று இந்தியத் தூதரகம எச்சரித்துள்ளதால் வேறுவேலையிலும் சேரமுடியாமல்தமிழர்கள் 150 பேரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
அஸ்கர் என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ளதாற்காலிக முகாமில் இவர்கள்தங்கியுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை இந்தத் தொழிலாளர்கள் நிலை குறித்து பஹ்ரைன் தொழிலாளர்நலத்துறை, ராயல் டவர் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அதில்உடன்பாடு ஏற்படவில்லையாம்.
தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என இந்தியத் தூதரகத்தின் முதல் நிலைச்செயலாளர் ஏ.கே. பட்நாகர் கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications