சென்னையிலும் எல்லோ லைன்-ப்ளூ லைன் பஸ்கள்
சென்னை:
டெல்லியில் இருப்பது போல சென்னையிலும், எல்லோ லைன், ப்ளூ லைன் விரைவுப்பேருதுகள் அறிமுகமாகவுள்ளன.
சட்டசபையில் போக்குவரத்துத் துறைக்கான மானியக் கோரிக்கைகள் மீதானவிவாதததிற்கு பதில் அளித்து அவர் பேசுகையில்,சென்னையில் தற்போது 40 கிமீ தொலைவுக்குத் தான் நகரப்பேருந்துகள்இயக்கப்படுகின்றன. ஆனால், நகரம் விரிவடைந்து கொண்டே போகிறது. இதனால்இனிமேல் 50 கிமீ தூரம் வரை நகரப் பேருந்துகள் இயக்கப்படும்.
சென்னை நகர மக்களின் தேவையினைக் கருத்தில் கொண்டு டெல்லி உள்ளிட்ட சிலமாநிலங்களில் இயங்கப்படுவதைப் போல, ஒரு இடததிலிருந்து புறப்பட்டுகுறிப்பிட்ட இடம் வரை இடையில் எங்கும் நிற்காமல் செல்லும் எல்லோ லைன் என்றபெயருடைய சிறப்பு பேருந்துகள் சென்னையிலும் அறிமுகப்படுத்தப்படும்.
இதேபோல குறிப்பிட்ட இடத்திலிருந்து கிளம்பி இடையில் சில முக்கியநிறுத்தங்களில் மட்டும் நின்று செல்லும் ப்ளூ லைன் ரக பேருந்துகளும் சென்னையில்அறிமுகப்படுத்தப்படும்.
தமிழக போக்குவரத்துக் கழகங்களுக்கு 1,000 புதிய பேருந்துகள் வாங்க ரூ. 100கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுளளது. மேலும் 1,000 புதிய பேருந்துகளை, தமிழகபோக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்தின் நிதியுதவியுடன் வாங்க முயற்சிமேற்கொள்ளப்படும்.
நிலுவையில் உள்ள 230 புதிய பேருந்துகைளயும் சேர்த்து மொததம் 2,230 புதியபேருந்துகள் இந்த ஆண்டு இயக்கப்படும்.
சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் ஆகிய நகரங்களில் உள்ள விரைவுப்போக்குவரத்துக் கழக பேருந்து நிலையங்கள் நவீனப்படுத்தப்பட்டு பயணிகளுக்குசிறப்பு வசதிகள் செய்துதரப்படும்.
மேலும் முக்கிய நகரங்களில் கம்ப்யூட்டர் முன் பதிவு வசதியும் ஏற்படுத்தப்படும்.
நிர்வாகத் திறனை மேலும் கூட்டும் விதமாகவும், வளர்ந்து வரும் போக்குவரத்துத்தேவையினை பூர்த்தி செய்யும் வகையிலும் திருவண்ணாமலையைத்தலைமையிடமாகக் கொண்டு புதிய போக்குவரத்துக் கோட்டம் ஏற்படுத்தப்படும்என்றார் நேரு.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications