மும்பை தொடர் குண்டுவெடிப்பு-செப்12ல் தீர்ப்பு

Subscribe to Oneindia Tamil

மும்பை:

மிகவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கின்தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவில்லை. செப்டம்பர்12ம் தேதிக்கு தீர்ப்புஒத்திவைக்கப்பட்டது.

கடந்த 1993ம் ஆண்டு மும்பை நகரில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. அதில்,நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இச் சம்பவம் தொடர்பாக பிரபல இந்தி நடிகர்சஞ்சய்தத் உள்ளிட்ட 123 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது.

மொத்தம் 686 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 16,000 பக்க வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. மும்பை தடா நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நிலுவையில்இருந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து சஞ்சய் தத் உள்ளிட்ட 123 பேரும் இன்று நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர்.நீதிமன்ற வளாகத்தைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும்மும்பை நகரின் முக்கிய பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

இந் நிலையில் இன்று நீதிமன்றத்தில்ஆஜரான அபுசலீமின் வழக்கறிஞர், இந்த வழக்குதொடர்பாக அபுசலீம் தாக்கல் செய்துள்ள மனு மும்பை உயர் நீதிமன்றத்தில்நிலுவையில் உள்ளது. எனவே தீர்ப்பை ஒத்திவைக்க வேண்டும் என்றார்.

இதையடுத்து செப்டம்பர் 12ம் தேதிக்கு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+