விவேகானந்தர் பாறையில் பரிதவித்த பயணிகள்
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி விவேகானந்தர் பாறைக்குச் சென்ற சுற்றுலா பயணிகள் 1,000 பேர், மீனவர்கள் கடலில் நடத்தியதிடீர் போராட்டத்தால் கரைக்குத் திரும்ப முடியாமல் கிட்டத்தட்ட 3 மணி நேரம் பரிதவித்தனர்.
கனனியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்களை, குளச்சல் முட்டத்தைச் சேர்ந்தமீனவர்கள் 50 படகுகளில் சென்று தாக்கினர். சின்னமுட்டம் மீனவர்களின் 2 படகுகளையும் சேதப்படுத்தியதோடு23 மீனவர்களையும் சிறை பிடித்துச் சென்றனர்.இதனால் சின்னமுட்டம் கிராமத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. போலீஸார் தலையிட்டு பிடித்துச் செல்லப்பட்ட23 மீனவர்களையும் நேற்று அதிகாலை விடுவித்தனர்.இந்த நிலையில், தங்களது கிராம மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டதைக் கண்டித்தம், சேதப்படுத்தப்பட்டபடகுகளுக்கு உரிய நிவாரணத் தொகை வழங்கக் கோரியும் நேற்று கன்னியாகுமரி கடல் பகுதியிலவிவேகானந்தர் பாறையைச் சுற்றிலும் படகுகளை நிறுத்தி மறியல் போராட்டத்தில் குதித்தனர் சின்னமுட்டம்மீனவர்கள்.
இந்த கடல் மறியலால் விவேகானந்தர் பாறைக்குச் சுற்றுலா சென்ற பயணிகள் கரைக்குத் திரும்ப முடியாமல்தடுக்கப்பட்டனர். அவர்களை அழைத்து வரச் சென்ற பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக படகையும்மீனவர்கள் தடுத்து திருப்பி அனுப்பி விட்டனர்.
மேலும் வேறு படகுகள் வராமல் தடுக்க மீன் பிடி வலைளையும் கடலில் போட்டு வைத்தனர்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் விரைந்து வந்து சின்ன முட்டம் மீனவர்களுடன் பேச்சுநடத்தினர். கிட்டத்தட்ட 3 மணி நேரமாக போராட்டம் நடந்ததால் விவேகானந்தர் பாறைக்குச் சென்ற சுமார் 1,000பயணிகள் பெரும் தவிப்புக்கு ஆளாகினர்.
அவர்களுக்கு டீ, பிஸ்கட் போன்றவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இதையடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர் சுனில்பாலிவால் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீனவர்களுடன்பேச்சு நடத்தி, அவர்களது பிரச்சினைக்கு தீர்வ காணப்படும் என உறுதியளித்தார்.
இதையடுத்து மீனவர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டனர்.
அதன் பின்னரே சுற்றுலா பயணிகள் படிப்படியாக கரைக்கு அழைத்து வரப்பட்டனர். இரவு 7 மணியளவில் தான்அனைத்து பயணிகளும் கரைக்குத் திரும்ப முடிந்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications